ட்ரம்பின் மூக்கு மறுபடியும் உடைந்தது..!

ழு முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி விதித்த பயணத் தடை சட்ட விரோதமானது என அமெரிக்க பெடரல் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் தீர்ப்பளித்திருந்தது. இத் தீர்ப்புக்கெதிராக ட்ரம்பின் அரசாங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றில் முறையீட்டு வழக்கைப் பதிவு செய்து தீர்ப்புக்காகக் காத்திருந்தது. ஆனால் சில மணி நேரங்களுக்கு முன்னால் மேன் முறையீட்டு நீதிமன்றமும் ட்ரம்பின் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்து ட்ரம்பின் மூக்கை உடைத்துள்ளது.

ஏழு நாடுகளின் மீதான பயணத் தடையானது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எந்த வகையில் பங்களிப்புச் செய்யும் என்பதற்கான ஆதாரங்கள் எவற்றையும் அரசாங்கம் நீதிமன்றுக்குச் சமர்ப்பித்திருக்கவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பு சம்பந்தமாக உடனடியாகத் தனது கருத்தை ட்ரம்ப் ட்விட்டரில் இப்படித் தெரிவித்துள்ளார்.

'இந்தத் தீர்ப்பால் நாடு கூரான முளையின் மேல் இருக்கிறது. நான் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்.'

இந்தத் தீர்ப்புக்கெதிராகவும் நீதிமன்றத்தில் தான் அப்பீல் செய்யப் போவதையே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -