ஸ்ரீ.மு.காங்கிரஸ் தவிசாளர் பதவி மன்சூருக்கு வழங்கப்படுவதே பொருத்தமானது- நாபீர்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவி கட்சியின் மூத்த போராளியும் பாராளுமன்ற உறுப்பினருமான மன்சூருக்கு வழங்கப்படுவதே பொருத்தமானது என நாபீர் பெளண்டேசன் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு ஆலோசனை !

மு.கா விலிருந்து ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரையும் கட்சிக்கு விசுவாசமாக கட்சிக்காக உழைத்து வரும் மூத்த போராளியான பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்களே தற்போதைய நிலையில் தவிசாளர் பதவிக்கு கட்சிக்குள் இருப்பவர்களில் மிகவும் பொருத்தமானவராகும். தவிசாளர் பதவி என்பது கட்சிக்கான மிகவும் முக்கியமான பதவி ஒன்றாகும்.

கட்சிக்காக பல்வேறு இன்னல்களை அனுபவித்து தன் உயிரையும் துச்சமாகக் கருதி பல்வேறு சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களுக்கும் மு.கா. கட்சியின் இருப்புக்கும் உழைத்தவர் என்ற வகையிலும் இதுவரைகாலமும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் எவ்வித துரோகங்களும் செய்யாமல் வருகின்ற இன்னல்களையும் எதிர்ப்புக்களையும் துச்சமாக மதித்து செயலாற்றிய செயல் வீரன் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் என்றால் அது மிகையாகாது.

இந்நிலையில் தன்னை ஒரு தியாகியாக மாற்றி, அம்பாரை மாவட்ட மக்களுக்கும் இலங்கைத் தேசிய முஸ்லிம் சமூகத்திற்கும் சேவையாற்றி வரும் மிகப்பொருத்தமான ஒருவரே பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் ஆவார்.

ஒரு சந்தர்ப்பத்தில் தேர்தல் காலத்தில் மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலுக்காக தனது வேட்பாளர் பதவியையே விட்டுக்கொடுத்து பிறருக்காக உதவி செய்த சேவைச் செம்மல். இவர் மக்களுக்காகவும் தனது கட்சிக்காகவும் தனது கல்வித்துறையை மேற்படிப்பை விட்டுவிட்டு மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்த ஒருவர் என்பதை வரலாறு தெரிந்த யாரும் மறுப்பதற்கில்லை.

எனவே இவ்வாறான தியாகிக்கு மு.கா. தலைமை இவ்வரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வேறு எங்கும் தவிசாளர் பதவி சென்றுவிடாது பாராளுமன்ற உறுப்பினர் மன்சூருக்கு வழங்க முன்வர வேண்டும். இதுவே அம்பாரை மாவட்ட மு.கா. போராளிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் மு.கா. தலைமை செய்கின்ற பேருபகாரமும் நன்றியுமாகும்.

எனவே, இது விடயத்தில் மு.கா. தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவசரமாகச் செயற்பட்டு குறித்த தவிசாளர் பதவியை பாராளுமன்ற உறுப்பினர் மன்சூருக்கு தற்போது வழங்க முன்வருவாரா ? இது மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகும்.

ஊடகப் பிரிவு,
நாபீர் பௌண்டேசன் ஸ்ரீ லங்கா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -