கல்குடா முஸ்லீம்களுக்கு அரசியல் அங்கீகாரம் தந்தது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ்தான்-அன்வர் நௌஷாத்

ல்குடாவிற்கு அரசியல் அங்கீகாரம் தந்தது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தான். இந்நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் மீதும் அதன் நடவடிக்கைகள் மீதும் நாம் மிகக் கவனமாக இருக்கின்றோம். கண்டபடி முஸ்லீம் காங்கிரசை தூசிப்பதனூடாக மக்கள் மனங்களில் இருந்து கட்சியையும் அதன் தலைமையையும் யாரும் அசைக்க முடியாது” என காஸ்ட்ரோ (CASDRO) அமைப்பின் தலைவரான அன்வர் நௌஷாத் தெரிவித்தார்.

கல்குடாவின் ஐக்கிய ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பிலான கருத்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பிரதி அமைச்சர் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் ஊடாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்ற ஸ்தாபனமே எமது தொகுதிக்கு அரசியல் அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. பின்னர் தற்போதைய பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் மூலமாக நமக்கான வெற்றியை தந்துள்ளது. இருப்பினும் தற்போதைய சூழலில் நாம், கட்சியினூடான அதிகாரத்தை இழந்துள்ளோம். இருப்பினும் எதிர்காலம் எமக்கு மிகப் பிரகாசமாக அமையும் என்பதில் எமக்கு எள்ளளவும் சந்தேகம் கிடையாது.

நமது தொகுதியின் முஸ்லீம் பிரதேச அரசியலை ஒரு கட்டமைந்த நிலைக்கு மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. சமூகத்தை நேசிப்பவர்களாலும், கட்சியின் ஆரம்ப கால போராளிகளை ஓன்று சேர்ப்பதன் ஊடாகவும் நாம் இதனை சாத்தியப்படுத்தலாம். கட்சியின் ஆரம்பகால போராளிகள், அவர்களின் பிள்ளைகள் கட்சியினூடான நலன்களை அனுபவிப்பதற்கான நுட்பங்களை நாம் வகுத்திருக்கின்றோம். அவர்களை அடையாளம் கண்டிருக்கின்றோம். நமது கட்சியின் தலைமைக்கும், அதிகாரம் கொண்ட பொறுப்புமிக்கவர்களுக்கும், நாம் அவர்களை அடையாளம் காட்டி அவர்களுக்கான நிவாரணத்தினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் காலங்களில் நமது மண்ணில் மக்களை அதிகாரம் கொண்ட பிரதிநிதிகள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும், நிவாரணங்களையும் வழங்க நாம் தயாராகவுள்ளோம்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -