எம்.ரீ.ஹைதர் அலி-
செம்மண்ணோடை கிராமத்தின் கருவாக்கேணி எல்லை வீதியில் எதுவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் ஓலைக்குடிசை ஒன்றில் மணல்த் தரையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கு தனது சொந்த நிதியிலிருந்து மணல்த் தரையினை சீமெந்தினால் மெழுகி அவர்கள் வாழ்வதற்குரிய உதவியினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் செய்து வழங்கினார்.
மேலும், செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயத்தின் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்து கொள்வதற்காக காணிக் கொள்வனவுக்காக தனது சொந்த நிதியிலிலும், மீள் குடியேற்ற கிராமமான கொண்டையன் கேணி கிராமத்திற்கான 250 மீட்டர் நீளமுடைய பள்ளிவாயல் பின் வீதிக்கான மின்சார இணைப்பினையும் தனது தனிப்பட்ட முயற்சியினால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் பெற்றுக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அத்தோடு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செம்மன்ணோடை மற்றும் மீள்குடியேற்ற கிராமமான கொண்டையன்கேணி ஆகிய கிராமங்களுக்கு செம்மண்ணோடை கிராம அபிவிருத்தி சங்கத்தின் அழைப்பின் பேரில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபைத்தலைவருமான கே.பீ.எஸ்.ஹமீட் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக 2016.09.18 ஆந்திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த போதே இவ்வாறான தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

