இதுவன்றோ இஸ்லாமிய தலைமைத்துவம்..!

எஸ்.ஹமீத்-
ஸ்லாமிய வரலாறு பல தலைவர்களைக் கண்டிருக்கிறது. கோமான் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நமது முதல் தலைவராக இருந்தார்கள். அவருக்குப் பின்னால் வந்த கலீபாக்கள் நம் சமூகத்திற்குத் தக்கபடித் தலைமை தாங்கி வழி நடத்தினார்கள்.

ஆடம்பரம் என்ற சொல்லுக்கே அவர்களின் அகராதியில் இடமிருக்கவில்லை. இறையச்சத்தின் காரணமாக எளிமையான வாழ்க்கையையே அவர்கள் விரும்பி வாழ்ந்தார்கள்.

இங்கே ஹஸரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் வாழ்விலிருந்து ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்:

கலீபாவாக நியமிக்கப்படும் முன்னர் மிகப் பெரும் செல்வந்தராக இருந்த அபூபக்கர் (ரலி) அவர்கள், கலீபாவான பின்னர், சமுதாயப் பணி காரணமாகத் தனது தொழிலையெல்லாம் விட்டு, ஏழையானவர்கள். அதன் பின்னர் பொது நிதியத்திலிருந்து அவரது அன்றாடச் செலவுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைக் கொண்டே வாழ்க்கை நடத்தினார்கள்.

ஒரு முறை அபூபக்கர்(ரலி) அவர்கள் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது, அன்னாரின் மனைவியார், உணவு உண்டபின் சிறிது இனிப்பைக் கொண்டு அபூபக்கர்(ரலி) அவர்களின் முன் வைத்தார்கள்.

‘என்ன இது இனிப்பு? யார் கொண்டு தந்தார்கள்’ என்று வினவினார் அபூபக்கர்(ரலி) அவர்கள்.

‘யாரும் தரவில்லை. நானேதான் தயார் செய்தேன். தாங்கள் வழங்கும் அரசு சம்பளப் பணத்திலிருந்து சிறிது சிறிதாய் மிச்சம் பிடித்து இந்த இனிப்பைச் செய்தேன்’ என்றார் மனைவியார்.

‘நான் பெறும் சம்பளம் நம் செலவு போக மிஞ்சும் அளவில் அதிகமாய் இருக்கிறதா? எவ்வளவு என்று சொல்’ என்று கடிந்து கொண்டார்கள் அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்கள். அது மட்டுமல்ல… அன்றிலிருந்து அந்தத் தொகையை தனது சம்பளத்திலிருந்து குறைத்துக் கொண்டார்கள். அளவிற்கு அதிகமாய்ப் பெற்ற தொகையில் செய்த இனிப்பையும் உண்ண மறுத்துவிட்டார்கள்.

இதுவன்றோ இஸ்லாமிய தலைமைத்துவம்!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -