மஹிந்தைக்கும் அதாஉல்லாஹ்வுக்கும் ஆயிரம் இருக்கும் - அஸ்மி ஏ கபூர்

தாஉல்லாஹ் மகிந்தவை சந்தித்தார் என ஒரு செய்தியை பார்த்தோம் அது உண்மையா? பொய்யா? என்று பார்ப்பதில்லை ஆனால் நாம் கண்ணால் கண்டது போல் நிறுவி விடுவோம்.

தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாஹ் மகிந்தவை சந்திக்க வில்லை. ஆனால் இங்கு இந்த செய்திகளை பரப்புகிறவர்கள் ஒன்றை விளங்கி கொள்ள வேண்டும் நல்லாட்சியும் இவ்வாறான செய்திகளை பரப்பி உருவானதுதான். இப்போது நீங்கள் அதில் படுகின்ற அவதிகளை பார்க்காமலா போகிறீர்கள்.

மகிந்தவை அதாஉல்லாஹ் சந்திப்பதால் நீங்கள் நல்லாட்சியில் முஸ்லிம்களின் சார்பாக பெற்ற எதை இழந்து விடுவீர்கள் என கருதுகிறீர்கள்..?

1.சுதந்திர மனிதனாக தனது விசம பிரச்சாரங்களை நல்லாட்சியில் முன்னெடுத்து வரும் ஞானசாரவை மகிந்த ஏதும் செய்து விடுவார் என்றா..?

2.இறக்காமத்தில் புத்தர் சிலை வைத்த தயாகமகேயினதும் முஸ்லீம் தீவிரவாதிகள் நாட்டில் இருக்கிறார்கள் எனச் சொன்ன விஜயதாச ராஜபக்ச வினதும் பதவி பறிபோய்விடும் எனப் பயந்தா..?

3.ஓரினச் சேர்க்கை விடயத்தை சட்டமூலமாக்காமல் மகிந்த விட்டு வடுவார் எனப் பயந்தா..?

4.இந்த ஆட்சியில் எல்லைப்படுத்ப்பட்ட தொல்பொருள் இடங்களை மகிந்த ராத்தாக்கி விடுவார் என நினைத்தா..?

5. இஸ்ரேலுடனான வர்க்கத்தை மேம்படுத்த எண்ணியிருப்பதாக ஜோன் அமரதுங்க சொன்னது நடக்காமல் போய்விடுமோ..?

6.வடக்கு கிழக்கை முஸ்லிம்களின் அங்கீகாரத்தை பெறமால் இணைத்து சமஷ்டியாக்கும் நோர்வேயின் அஜன்டா நிறைவேறாமல் போய் விடுமோ? எனப்பயந்தா..?

7.உங்கள் தலைவர்களின் கொள்ளைகள் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பைல்களை கையிலெடுத்து விடுவார் எனப் பயந்தா..?

தம்புள்ளை பள்ளிக்காணி எங்கே ..?

தர்காநகர் விசாரணை எங்கே..?

கண்டிலைன் மினாரா எங்கே ..?

பேஷன்பக் தீவைப்பு விசாரணை எங்கே..?

மல்லிகாஸ் தீவைப்பு விசாரணை எங்கே..?

பாணந்துரை மதரஸாவை மூடியதன் விசாரணை எங்கே ..?

தெஹிவலை பாத்தியா மாவத்தை பள்ளி புணர்நிர்மானம் எங்கே.. ?

இன்று இடம் பெறும் தம்புள்ள கலவரம் எதனால்..?

மெளலவி அப்துல் ராசிக்கை கைது செய்தவர்களால் ஏன் ஒரு ஊரை எரியூட்டியவரை கைது செய்ய முடியவில்லை..?

இந்த நல்லாட்சி எங்கு விதைக்கப்பட்டது ..? எங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது..? என விளங்க முடியாதவர்களாக இன்னுமா இருக்கிறீர்கள்..? கறுத்த உடையுடன் தனியாக வாகனத்தில் சென்று நல்லாட்சிக்காக 300 மில்லியனை பெற்றவர்களின் கதையை விடுத்து, மக்களின் மீது கொண்ட பற்றுதியால் தனது அதிகாரத்தை உண்மைக்காக இழந்த தலைவனுக்கு பேச முனைவது எவ்வளவு அற்பத்தனமானது.

மகிந்த ராஜபச்சவை அதாஉல்லாஹ் சந்திப்பதாக இருந்தால் மறைக்க வேண்டியதில்லை. எனெனில் அவர் ஐமசுகூ பின் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களில் ஒருவர். கட்சி தொடர்பான விடயங்கள் ஆயிரம் இருக்கும். நாங்களும் அவற்றை துணிந்து சொல்வோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -