அமைச்சா் பாட்டலி சம்பிக்க பற்றிய நுால் வெளியீடு - பிரதமர் பங்கேற்பு

அஷ்ரப் ஏ சமத்-
மைச்சா் பாட்டலி சம்பிக்க ரணவக்க அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பிணரானகவும் 10 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு ” நிலையான வழியை நோக்கி” சிறந்த சுபீட்சமான வசதிமிக்க தேசத்தை நோக்கி பத்து வருடங்கள் எனும் பாட்டலி சம்பிக்க பற்றிய நுால் நேற்று (1) இலங்கை மன்றக் கல்லுாாியில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகா் கரு ஜயசூரிய, அமைச்சா்களான அர்ஜுன ரனதுங்க ,கலாநிதி சரத் அமுனுகம, மற்றும் பௌத்த மதகுருக்கள், பலரும் கலந்து கொண்டனா்.

இங்கு விசேட உரையாற்றிய அமைச்சா் கலாநிதி சரத் அமுனுகம;

பத்து வருடங்கள் வெற்றியினை நனவாக்கும் அமைச்சா் பாட்டலி சம்பிபிக்க, பொதுமக்களின் அபிலாசைகளை முற்டுத்தி, தன்னை அர்ப்பணித்து, நாடு, இலங்கை குடியாளா்களுக்கு சுற்றாடல் , மன்சக்தி , எரிசக்தி, விஞ்ஞான தொழில்நுட்பம், மேல்மாகண அபிவிருத்தி மற்றும் மாநகர சபைகள் அமைச்சராக கடந்த 10 வருடங்கள் சிறந்த சேவையை ஆற்றி வருகின்றாா்.

அவா் எப்போதும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக அச்சமும் பயமுமின்றி அனைத்து சவால்களையும் வெற்றி கொண்டு செல்பவா், தனது வெற்றிப்பயணத்தில் முன்னேறிச் செல்லும் ஒரு கிளீன் அரசியல் வாதி, இலங்கை அரசியல் வரலாற்றில் சிறந்ததொரு இடத்தை இந்த நாட்டில் வாழும் மக்கள் மனதில் இடம்பிடிப்பாா் பாட்டலி சம்பிக்க ரணவக்க என அமைச்சா் சரத் அமுனுகம அங்கு உரையாற்றினாா்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -