சோனியைப் உள்ளே எடுக்க வேண்டாம் என்று கூறி சம்பளத்தை கேற்றுக்கு அனுப்பிய அதிபர்

சோனியைப் பாடசாலைக்கு உள்ளேயே எடுக்க வேண்டாம் சம்பளத்தை கேற்றுக்கு வெளியே அனுப்புங்கள் என்ற சம்பவம் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றதாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் இம்போட்மிரர் ஊடக வலையமைப்பினால் குறித்த சம்பவம் தொடர்பில் உரியவர்களிடம் நேரடியாக அதிபர், ஆசிரியர் மற்றும் கல்விப்பணிப்பாளர் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டு விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.


பாதிக்கப்பட்ட ஆசிரியரை இம்போட்மிரர் தொடர்பு கொண்டபோது இவ்வாறு தெரிவித்தார்:

எனது பெயர் பாத்திமா பரிஹா பாயிஸ் நான் புதிதாக இஸ்லாமிய மதத்தைத் தழுவிய ஒரு ஆசிரியை எனது தந்தை ஒரு அதிபர் தாய் ஒரு ஆசிரியர் இருவரும் இதே பாடசாலையில் கற்பித்தவர்கள் அதனால் நானும் இந்தப் பாடசாலையை விரும்பிப் பாரம் எடுத்தேன்.

என்னை இப்பாடசாலையை விட்டு விலக்கிவிட வேண்டும் என்று குறிப்பிட்ட அதிபர் மிகமோசமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்கிறார். சோனிக்கு இங்கு வேலையில்லை வெளியாகுமாறு கொச்சைப்படுத்துகிறார்.
யாழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாடசாலைக்கு வந்து ஏன் சோனிக்கு வகுப்புக் கொடுத்தீர் என்று அதிபரை நோக்கி கேட்டார். என்றும் குறித்த ஆசிரியர் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த அதிபரை ஆசிரியர்கள் பலர் எதிர்த்த போதும் தனிமையில் போராடி அவாவை பாடசாலைக்கு அழைத்தவள் நானே என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் பாடசாலை அதிபரை இம்போட்மிரர் தொலைபேசியில் அழைத்துப் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த ஆசிரியை  தரம் நான்குக்கான வகுப்பாசிரியையாக இருக்கிறார் இவரை பெற்றார்கள் விரும்பவில்லை. பலதடவைகள் பெற்றார்கள் வந்து என்னிடம் முறைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் நான் சோனி என்ற வார்த்தை பிரயோகிக்க வில்லை. அப்படி பிரயோகிக்கும் இனவாதியும் அல்ல நான். ஆனால் அந்த ஆசிரியை என் மீது அவதூறாக உலக உணவு அமைப்பிடம் முறையிட்டு நான் மோசடி செய்ததாக கூறியிருந்தார். அத்துடன் மனித உரிமை மீறல் அமைப்புக்கும் முறைப்பாடு ஒன்றினை கொடுத்திருக்கிறார். அதனால் இவரை இப்பாடசாலையில் இருந்து அனுப்புவதே சிறந்தது என்று தெரிவித்தார்.

மேலும் குறித்த விடயங்களை ஆராய்ந்தீகளா.. பாடசாலையில் நடப்பது என்ன என்பதனை கேட்டறிய கிளிநொச்சி குறித்த வலயக்கல்விப் பணிப்பாளரை இம்போட்மிரர் தொடர்பு கொண்டபோது:

ஊடகங்களுக்கு என்னால் ஒன்றும் கொடுக்க முடியாது பின்னர் எனக்கு எதிராக வேறு நடவடிக்கை எடுப்பார்கள் என்று அழைப்பைத் துண்டித்து விட்டார் வலயக் கல்விப் பணிப்பாளர்.

ஆனால் எது எவ்வாறாக இருந்தாலும் குறித்த பாடசாலையில் 15க்கு மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அவர்களின் எதிர்காலம் கவனிக்கப்படவேண்டும். சம்மந்தப்பட்ட ஆசிரியை மற்றும் அதிபரை விசாரித்து சரியான தீர்மானம் எடுப்பதை விடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இனவாதமாக நடந்து கொள்கின்றார். அவர் சொல்வதுபோல்தான் பாடசாலை நடாத்த வேண்டும் என்றால் இதற்கு கல்வி நிருவாகம் இடமளிக்கக் கூடாது. யாராயினும் கல்வியில் விளையாட இடமளிக்காது மாணவர்களின் கல்விக்கு உதவ வேண்டுமே தவிர இனவாதத்தை வளர்க்க இடமளிக்கக் கூடாது என்பதே இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.  தொடரும்...


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -