அரிசியின் விலை : 1762 வர்த்தக நிலையங்களில் சுற்றி வளைப்பு

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளின் சுற்றி வலைப்பில் புறக்கோட்டைச் சந்தையில் அரிசியை அதிக விலைக்கு விற்றக்க முட்பட்ட 3000 கிலோ கிராம் அரிசியும், காலாவதியான 2600 கிலோ கிராம் அரிசியும் கைப்பற்றப்பட்டதாக கைத்தொழில் அமைச்சு இன்று ( 25 ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் ,வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலின் பேரில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணை அதிகாரிகள் மேற் கொண்ட இந்த நடவடிக்கையின் போது 1762 வர்த்தக நிலையங்களில் மேற் கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்ட 1265 மோசடி வர்த்தகர்கள் அகப்பட்டனர். இவர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று (24) வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது அரிசி விலையை அதிகரித்து விற்க ஈடுபட்ட 33 வர்த்தகர்களும் அகப்பட்டுள்ளதாகவும் இச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -