மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான 02வது கூட்டம்..!

மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான 02வது கூட்டம் அம்பாறை மாவட்ட இணையத்தின் தவிசாளர் திரு.வ. பரமசிங்கம் அவர்களின் தலைமையில் 28.02.2017ம் திகதியான இன்று அக்கரைப்பற்று இணைய மண்டபத்தில் இடம்பெற்றது.

'தூய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் வகையில் ஒன்றிணைந்து செயற்படுவோம்’ எனும் தொணிப்பொருளில் அமைந்த இம்மாவட்ட மட்ட கலந்துரையாடலில் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ரோகண அவர்களும், SLCDF அமைப்பின் திட்டப் பொறுப்பாளர் திரு.ஏ.சொர்ணலிங்கம் அவர்களும், அதே போன்று இணையத்தின் அங்கத்துவ அமைப்புக்கள் மற்றும் ஏனைய அரசசார்பற்ற அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் இணைந்து இந்நிகழ்வை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் மாவட்ட மட்ட கூட்டம் எதிர்வரும் 09.03.2017 ஆம் திகதி நடைபெறும் எனவும் அரிவிக்கப்பட்டது. மேலும் மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான மாநாட்டினை அக்கரைப்பற்றில் நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இவ் மார்ச் 12 இயக்கத்தின் செயற்திட்டமானது மார்ச் மாதம் 13ஆம் திகதி கொழும்பில் இருந்து  வாகனப் பேரணியாக ஆரம்பபித்து நாடு பூராகவும் முன்னெடுத்துச் செள்ளப்பட்டு மீண்டும் கொழும்பை வந்தடையவுள்ளதாக அதன் செயற்பாட்டாளர் குறிப்பிட்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -