மட்டக்களப்பிலேதான் நான் மிக மோசமான துன்புறுத்தல்களுக்கு உள்ளானேன்- அரசாங்க அதிபர் சார்ள்ஸ்.

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

ட்டக்களப்பிலேதான் என்னுடைய சேவைக்காலத்தில் நான் மிக மோசமான துன்புறுத்தல்களுக்கு உள்ளானேன். மட்டக்களப்பு மாவட்ட

வீடியோ அரசாங்க அதிபர் சார்ள்ஸின் கருத்துக்கள்:-

நான் வட மாகாணத்தில் வவுனியாவில் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த வேளையில் தனக்கு எவ்விதமான பிரச்சனைகளும் ஏற்படவில்லை. முக்கியமாக கூறுவதாயின் அரச அதிகாரிகள், பொதுமக்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் என அனைவரும் தனது பணியினை மேற்கொள்வதற்கு நூறு வீதமான ஒத்துளைப்புக்களை வழங்கியிருந்தார்கள். ஒரு நாள் கூட எனது மனம் புண்படும் படி வடமாகாணத்தில் அதிலும் முக்கியமாக வன்னி பிரதேசத்தில் இடம் பெற்றதில்லை. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நான் கடமையினை பொறுப்பேற்ற மறு நாளே பாரிய சவால்களை எதிர் நோக்க நேரிட்டதும் அல்லாமல் இன்றும் அந்த சவால்களை நான் எதிர் நோக்கிக்கொண்டே வருகின்றேன்.

அது மட்டுமல்லாமல் என்னுடைய சேவைக்காலத்தில் மிக மோசமாக துன்புறுத்தல்களுக்கு உள்ளான சேவை நிலையமாக மட்டக்களப்பினை பார்க்கின்றேன். என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றும் பி.எஸ்.எம். சார்ள்ஸுடனான நேர்காணலின் பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் அரச துறையில் மிகப் பெரிய பதவியாக கருதப்படுகின்ற மாவட்ட அரசாங்க அதிபர் எனும் பதவியினை வடமாகாணத்திலும், மட்டக்களப்பிலும் ஒரு பெண்மணியாக இருந்து பணியாற்றிய அனுபவத்தில் நீங்கள் எதிர் நோக்கிய முக்கிய சவாலாக உங்களுடைய வாழ்க்கையில் எதனை கருதுகின்றீர்கள் என்ற கேள்விக்கே மாவட்ட அரசாங்க அதிபர் சார்ள்ஸ் மிகவும் அமைதியான முறையிலும் தெளிவாகவும் குறித்த பதிலினை தெரிவித்தார்.

மேலும் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகளான

01- உலக அரசியலில் இரும்பு பெண்மணிகளாக கருதப்படுகின்ற பெனாசீர் பூட்டோ, சேக் கஸீனா, பேகம் காலிதா ஷியா, சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா போன்றவர்கள் மத்தியில் நீங்கள் இலங்கை நிருவாக துறையில் இரும்பு பெண்மணியாக கலக்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உங்களுடைய வாழ்க்கை வரலாறு, பாடசாலை கல்வி, பல்கலை கழக வாழ்க்கை சம்பந்தமாக சிறிது விளக்கமளிக்க முடியுமா?

02- கடந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி தற்பொழுதைய நல்லாட்சியாக இருந்தாலும் சரி உங்களை கெளரவப்படுத்தி உங்களினுடைய அரச துறைசார்ந்த பணியினை முன்னெடுத்து செல்வதற்கு ஒத்துளைப்பு வழங்கபடுகின்றமைக்கான விடயத்தினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

03- அரச துறையினை எடுத்துக்கொண்டால் அரசியல் வாதிகளின் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக பரவலாக பேசப்படுவது சம்பந்தமாக உங்களுடைய கருத்தென்ன?

04- அரசாங்கத்தின் கைபொம்மையாக நீங்கள் செயற்படுவதாக சமூகவலைத்தளங்களில் உங்கள் மீது குற்றம் சுமத்தப்படுவது சம்பந்தமாக உங்களினுடைய கருத்து எதுவாக இருக்கின்றது?

05- வடமாகாணத்தினை சேர்ந்த நீங்கள் தமிழர்களினுடைய உரிமைகள் சம்பந்தமான விடயங்களில் கரிசனையோடு செயற்படுவதில்லை என பேசப்படுவது சம்பந்தமாக உங்களுடைய கருத்தென்ன?

06- அரசசார்பற்ற நிறுவனங்களினால் மாவட்டத்தில் முன்னெடுக்கபடும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நீங்கள் தடையாக உள்ளீர்கள் என கூறப்படுவது சம்பந்தமாக உங்களுடைய கருதென்ன?

07- மாவட்டத்தில் மாவட்ட செயலகத்தினால் இடம் பெறுகின்ற சகல அபிவிருத்திகளும் அரசியல்வாதிகளின் சிபார்சுக்கமைவாகவே இடம் பெறுகின்றது என்பது சம்பந்தமாக உங்களினுடைய கருத்து எதுவாக உள்ளது?

08- தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீங்கள் ஒத்துளைப்பு வழங்குவதில்லை என கூறப்படுவது சம்பந்தமாக உங்களின் கருத்தென்ன?

09- மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்களை நீங்கள் கண்டுகொள்ள வில்லை என உங்கள் மீது குற்றம் சுமத்தப்படுவது சம்பந்தமாக உங்களின் கருத்தென்ன?

10- மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் குறுகிய நிலப்பரப்பிற்குள் முடக்கப்பட்டுள்ளது சம்பந்தமாக நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றீர்கள்?

11- யுத்தகாலங்களில் தங்களது பூர்வீக நிலங்களில் இருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் இன்னும் மாவட்டத்தில் மீள் குடியமர்த்தப்படமல் இருப்பதற்கான காரணம் என்ன?

12- மாவட்டத்தில் நான்கு முஸ்லிம் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்கள் பிரதேசத்து அரசியல்வாதிகளின் கைபொம்மையாக செயற்படுகிறார்கள் என பிரதேச மக்களால் குற்றம் சுமத்தப்படுவது சம்பந்தமாக உங்களின் கருத்தென்ன?

13- இந்த நல்லாட்சி அரசாங்கம் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதனை செய்ய வேண்டியுள்ளது என நினைக்கின்றீர்கள்?

போன்ற கேள்விகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்த விரிவான விளக்கங்களை கொண்ட பதில்கள் அடங்கிய காணொளியானது எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -