குருணாகல், குளியாப்பிட்டிய இழுக்ஹேன பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிக்குள் இந்த பொலிஸ் அதிகாரி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இழுக்ஹேன குடாவெவ பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான கொலை செய்யப்பட்ட நபர் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.
குடும்ப தகராறு வலுப்பெற்றதன் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை தாக்குதல் நடத்திய நபர் குறித்த பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
