ஏ.ஆர்.நெளஷாத், சாஜில்-
கிழக்கு மண்ணில் ஏறாவூர் பிரதேசத்தில் முதல் முதலாக புற்று நோயாளர்களுக்கான வைத்தியசாலையொன்றை EASTERN CANCER CARE CENTRE & HOSPICE எனும் பெயரில் உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்கான பணிகளை பல சமூக சார் விளையாட்டு கழகங்கள்,பொது நல சிந்தனையாளர்கள் மேற் கொண்டு வருகிறார்கள்.
இது வரை காலமும் எந்தவொரு அரசியல் வாதியோ, வெளி நாட்டு நிதியுதவியோடு இயங்கும் சமூக நல அமைப்புக்களோ பொருட்படுத்தாத ஒரு புது வித முயற்சியாகவே இது தென்படுகிறது.
எவரொருவர் ஓர் #உயிரை #வாழ வைக்கின்ராறோ, அவர் #மனிதர்கள் அனைவரையும் #வாழவைத்தவராவார். (அல்குர்ஆன்- 5:32)
மேற் கூறப்பட்ட இறை வசனத்தின் கூற்றின் படி இவ் வைத்தியசாலை அமைக்கும் சேயைானது உண்மையில் மக்கத்துவமானது. அதுமட்டுமன்றி இதற்காக நாம் கொடுக்கும் தான தர்மமானது எமது மரணம் தாண்டியும் பயனளிக்கும் நிலையான தர்மமாக வரக் கூடியது.
உண்மையில் கொடிய #புற்றுநோயால் பாதிக்கப் பட்டு உடலாளும் உள்ளத்தாலும் தினம் தினம் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் எமது உறவுகளுக்கு ஆறுதலளிக்கும் ஒரு பணியாகவே இது அமையக் கூடும்.
இது ஒரு தனி ஊருக்கான ஒன்றல்ல ஒட்டு மொத்த கிழக்கு மக்களுக்கும் பிரயோஜனமான ஒன்றாகும்.
#புற்றுநோயாளர் இல்லம் கனவு கைகூடும் முயற்சியில் ஏறூர் மக்கள் பல்வேறு மட்டங்களிலும் உள்ள அன்பானவர்கள் கைகொடுக்க எடுக்கும் முயற்சியானது உண்மையில் உணர்வு பூர்வமானது. ஊரின் ஒற்றுமையை பறை சாட்டக்கூடியது.அதுமட்டுமன்றி ஏனைய பிரதேசங்களுக்கும் முன்மாதிரியானது.
இறைவனின் உதவியும் அருளும் நிறைய பிரார்த்தனை செய்வோம்.
இந்த வேலைத்திட்டத்திற்கு ஒவ்வொரு தனிநபரினதும் குழுக்களினதும் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் இன்றியமையாத ஒன்றாகும். பிரதேசங்கள் கடந்து,கடல் கடந்து உதவக்கூடிய உள்ளங்களுக்கு இதை அறியப்படுத்தும் ஒரு தூய நோக்கமே இதுவாகும்.
இவ் வைத்திய சாலையின் உருவாக்கத்திற்காக இலங்கையின் நாளா பாகங்களில் வாழும் எம் சகோதரர்களோ, அல்லது வெளி நாடுகளில் வாழும் சகோதரர்களோ இந் நிலையான தர்மத்தை வழங்கி எமது மரணத்திற்கு பிற்பாடும் நன்மைகளை சேகரிக்க ஆசையிருந்தால் உங்கள் உதவிகளை நேரடியாக வழங்க முடியாதுதிருந்தாலும் உங்கள் உதவிகளை கீழுள்ள மக்கள் வங்கியின் கணக்கிலக்கத்துக்கு 123-1001-00049812 வைப்பிலிட முடியும்..
இம்மகத்தான சேவைக்காய் அனைவரும் அணிதிரள்வோம் முன் வாரிர் இன்ஷா அல்லாஹ்

