கிழக்கு மாகாண முதலமைச்சராக கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி சத்தியப் பிரமானம்

கி ழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையிலான குழுவினர் ஈரான் மசான் டரான் மாணிலத்தின் ஆளுணரின் அழைப்பை ஏற்று ஈரான் மற்றும் ஐக்கிய அரப் அமீரகத்தில் (துபாய்) இடம்பெறும் விவசாயம், மீன்பிடி, சுற்றுலா துறைசார்ந்த மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று (26) அதிகாலை  ஈரான் சென்றுள்ளமையினால் முதலமைச்சின் பதில் கடமையை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணியிடம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மாநாட்டுக்கு கிழக்கில் இருந்து முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், சபையின் தவிசாளர் சந்திரதாஷ கலபதி, திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் பலரும் சென்றுள்ளனர்.

உத்தியோகபூர்வமான பயனமாக அங்கு செல்கின்ற காரணத்தினாலேயே கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ முன்னிலையில் பதில் கடமைக்குரிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -