”பட்டம் பெற்று மாடு மேய்க்கும் இலங்கைப்பெண்”

டந்த 2003 ஆம் ஆண்டு பௌத்தம் மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெண் ஒருவர் கால்நடை வளர்த்து அன்றாட தேவைகளை நிறைவேற்றி வருகின்றார். கலஹா - பெல்வூட் பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான சாலிக்க நவோதனி என்ற பெண்ணே, பட்டம் பெற்று கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றார்.

குறித்த பெண்ணின் வீடு மிகவும் பழமையானதாகவும், அடிப்படை வசதிகளற்றதாகவும் காணப்படுகிறது. குறித்த பெண்ணுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் அவர்கள் குப்பி விளக்குகளை வைத்துக்கொண்டே கல்வி நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று தனது இளங்கலை சான்றிதழை வீட்டின் சுவரில் தொங்கவிட்டுள்ள குறித்த பெண், கணவனுக்கு உதவியாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றார். தொழில் பெறுவதற்காக பல பரீட்சைகளை மேற்கொண்டிருந்த நிலையிலும் அவருக்கு எந்த தொழிவாய்ப்பும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னை உயர் கல்வி படிப்பதற்காக தன் கணவர் செலவுகளை மேற்கொண்டிருந்தார். எனினும் அதன்மூலம் எந்தவித பிரதிபலனும் கிடைக்கவில்லை. ஆனால் கணவனுக்கு உதவ வேண்டும் என்றும் குறித்த பெண் தெரிவித்துள்ளார். என்னுடைய கல்வியை வைத்து கணவனுக்கு உதவி செய்ய முடியாமல் போனாலும் அவருடைய தொழிலுக்காக என்னால் உதவ முடியும் என குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய வலியை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே சுவரில் பட்டம் பெற்ற சான்றிதழை தொங்கவிட்டுள்ளதாக குறித்த பெண் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -