பாறுக் ஷிஹான்-
தமிழ் மக்களின் உரிமையான இறைமையை கோரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்து தமிழ்மக்களின் ஆணையை மீறும் செயல் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். பகிரப்பட்ட இறைமையினை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் வேறொருவரிடம் இருந்து தான் இறைமையினை பகிர்ந்துகொள்ள வேண்டுமென்பதில் உடன்படவில்லை எனும் தொனியில்பேசியுள்ளார். தேசிய அரசியல் 1951ம் ஆண்டு காலத்தில் இருந்து தமிழ்தேசத்திற்கென தனித்துவமான இறைமை இருக்கின்றது. அந்த இறைமை எங்களிடம் மட்டுமேஇருக்கின்றது. அதனை வேறு எவரிடமும் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.
தமிழரசுக் கட்சி கூட எம்மிடம் இருக்கும் இறைமை என்ற உரிமையை அங்கீகரிக்கப்பட்டு, அந்த இறைமையை கூட்டி அதற்குள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சின் விவாதத்தில்கலந்து கொள்வதென்பதும், அரசியல் அமைப்பு உருவாக்கம் என்பதும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பதும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முக்கியமானவை.
தமிழ் மக்கள் தமது இறைமையைக் கோரவில்லை என்றும் இறைமையை பகிர வேண்டுமென்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆணித்தனமாக கேட்கவில்லை என்றும் கூறியிருக்கின்றார். இறைமையை பகிர்ந்து கொள்ளலாம், அதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. அப்படியிருந்தும் நாங்கள் அதைக் கோரவில்லை என கூறுகின்றார். ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றது.
ஒற்றையாட்சி, சமஷ்டி என்ற சொற்கள் பாவிக்கக்கூடாது. தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாதென்றும் கூறியிருக்கின்றார். சுமந்திரன் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறினாலும், நடைமுறையில் இறைமையை பகிர்ந்தளிக்கச் சொல்லிக் கேட்கவில்லை என்று சொல்வதன் மூலம் சட்டரீதியாக மிகவும் தெளிவான வாக்குறுதியை அரசாங்கத்திற்கும், இலங்கைப் பாராளுமன்றத்திற்கும் கொடுக்கின்றார் என குற்றஞ்சாட்டினார்.
ஒற்றையாட்சிக்கு முழுமையாக இணங்கத் தயார் என கூறியிருக்கின்றார். இறைமையை கோரவில்லை என ஆணித்தனமாக பாராளுமன்றத்தில் கூறியிருக்கின்றார்கள். எங்கு எமது உரிமைகளைக் கோர வேணுமோ அங்கு, தமிழ் மக்கள் கொடுத்திருக்கும் ஆணையை மீறுகின்ற வகையில் கூறியிருக்கின்றார்கள். தேர்தல் காலத்தில் கொடுக்கும் வாக்குறுதிகள், தேர்தல் நிறைவடைந்த பின்னர் மீறும் செயற்பாட்டில் இருக்கின்றார்கள். வடகிழக்கில் பேசும் போதே இறைமையைப் பற்றிபேசுகின்றார்கள்.
பேச வேண்டிய இடத்தில் அனைத்துக் கொள்கைகளையும் கைவிட்டுபேசுகின்றார்கள் என்பதனை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் எமது எதிர்கால சந்ததியினருக்கு துரோகம் அழிக்காத வகையில் கட்டுப்படுத்தலாம் என்றும் தமிழ் மக்களை உரிய நடைமுறைகளை கையாள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
