மட்டக்களப்பில் 5 இலட்சம் குடியிருப்புக்களுக்கு சுத்தமான குடிநீர்வழங்கும் திட்டம் - அலிஸாஹிர்

மட்டக்களப்பு உறுகாமம் மற்றும் வடிச்சல் குளங்களை இணைப்பதன் மூலம் மட்டக்களப்பிலுள்ள 5 இலட்சம் குடியிருப்புக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ளத் தடுப்பு தொடர்பாக அவரிடம் நேற்று (30) வினவப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு மாவட்டம் உறுகாமம் மற்றும் வடிச்சல் குளங்களை இணைத்து விவசாயத்தை மேம்படுத்தவும், வெள்ளப்பெருக்கைத் தடுக்கவும் மேலும் மாவட்டம் முழுவதற்குமாக குடிநீர் விநியோகிக்கவும் கூடியதான பெருந் திட்டம் அடுத்தாண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.

வருடாவருடம் மட்டக்களப்பு மாவட்டம் எதிர்கொள்ளும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பின் பாரிய குளங்களில் ஒன்றான உறுகாமம் குளமும் அதற்கருகே அமைந்துள்ள வடிச்சல் குளமும் இணைக்கப்பட விருக்கின்றது.

இவ்விரு குளங்களையும் இணைப்பதற்கான பாரிய நீண்டகாலத் திட்டம் ஒன்றிற்காக இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்திலே ஆரம்பத் திட்டவரைவு மற்றும் ஆய்வு வேலைகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல நகரங்கள், வாகரை வரையுள்ள கிராமங்களுக்குமாக 5 இலட்சம் குடியிருப்புக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க முடியும்.

மட்டக்களப்பில் வெள்ளப் பெருக்குப் பதிப்புக்களை முற்றாகவே இல்லாது செய்ய முடியும் என்றும் சாத்தியவள அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஏறாவூர் தொடக்கம் சித்தாண்டிப் பகுதி எதிர் நோக்கம் வெள்ள நிலைமை சீர் செய்யப்பட்டுவிடும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விவசாயத்துக்கான நீரைத் தேக்கி வைப்பதனூடாக தடையின்றி நீர்ப்பாசனம் செய்ய முடியும் என மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் ஏ.எல். ஜவ்பர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -