சிரிய நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளுக்கெதிராக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23-12-2016) அன்று ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து உலக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அநீதிகளுக்கெதிரான கண்டனப் பேரணி ஒன்றை Royal Youths அமைப்பினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் எங்கள் கண்டனத்தையும் எதிர்ப்பையுமேனும் தெரிவிப்போம் எனும் தொனியில் எமது உம்மத்துக்களுக்கு எங்கு அநியாயம் நடந்தாலும் அந்த உம்மத்துக்காக நாங்கள் எமது ஆதரவை வெளிப்படுத்துவோம் என்ற வகையில் இந்த கண்டனப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி முன்பாக ஆரம்பித்து பிரதேச செயலக முன்றல் வரையாண கண்டனப்பேரனயில் எந்தவித இயக்கவேறுபாடுகளும் களைந்து வந்து கலந்துகொள்ளுமாறு Royal Youths அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி கண்டனப்பேரணி எமது முகநூலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
ஏ.எல்.ஆஸாத்,
சட்டக்கல்லூரி -

