சிலாவத்துறையின் தாகம் தீர்த்த அமைச்சர் ரிஷாட் - பிரதம அதிதியாக றிப்கான் பதியுதீன்

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களினால் மன்னார் சிலாவத்துறை சிறுக்குளம் கிராமத்திற்கான 2000 லீட்டர் கொள்வனவு கொண்ட குடிநீர் தாங்கி மக்கள் பாவனைக்காக இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

அமைச்சரின் இணைப்புச்செயலாளரான முஜாஹிர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் முசலி பிரதேச சபை உறுப்பினர் பைரூஸ் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கிராம மக்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தார்கள்.

அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னராக சிருக்குளம் பள்ளி நிருவாகம் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களுடனான கிராமத்தின் அபிவிருத்தி சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -