கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூஎல் – 121 என்ற விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள வரதா சூறாவளி தீவிரமடைந்துள்ளதையடுத்து சென்னையில் கடும் மழை மற்றும் காற்று வீசுவதால் குறித்த விமானம் திருப்பியனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை, டுபாயில் இருந்து சென்னை நோக்கி பயணித்த எமிரேட்ஸுக்கு சொந்தமான விமானமொன்றும் சென்னையில் ஏற்பட்டுள்ள சீரற்றகாலநிலையால் அங்கு தரையிறக்க முடியாமல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீரகேசரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -