நாம் பொறுப்பேற்ற போது கண்ணி வெடியாலேயே நிதி அமைச்சு உருவாக்கப்பட்டிருந்தது. அது எப்போது வெடிக்கும் என்று நாம் அறிந்திருக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பிலுள்ள ஒரு பகுதி மக்களுக்கு வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்று இடம்பெற்றது.
இதன்போதே பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
நிதி அமைச்சிலுள்ள கண்ணி வெடியிலிருந்து வயர்களை நீக்குவதுபோல இந்த ஓரிரு வருடங்களில் நாம் வயர்களை அகற்றியுள்ளோம்.
இப்போது அந்த கண்ணிவெடி வெடிக்காது என்பதை நாம் அறிந்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ,
நாட்டில் அரசியல், சமய, சமூக உரிமைகள் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில் மக்களின் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் செயற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
