செயலாளர் விவகாரம் : ACMC தேர்தலில் களமிறங்குவதில் சிக்கல்..!

கில இலங்கை மக்கள் காங்­கிரஸின் செய­லாளர் வை.எல்.எஸ்.ஹமீட்டை பதவி நீக்கம் செய்து விட்டு அப்­ப­த­விக்கு எஸ்.சுபைர்தீன் நிய­மிக்­கப்­பட்­ட­மைக்கு எதிர்ப்பு தெரி­வித்து இந்­நி­ய­ம­னத்­துக்கு இடைக்­கால தடை­யுத்­த­ரவு வழங்­கு­மாறு வை.எல்.எஸ்.ஹமீட் தாக்கல் செய்­தி­ருந்த வழக்கு எதிர்­வரும் மார்ச் மாதம் 9 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளமை கட்சி எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வதில் பல சிக்­கல்­களைத் தோற்­று­விக்கும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் மார்ச் மாதத்தில் நடாத்­தப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பாவும் உறு­தி­ய­ளித்­துள்­ள­மையினாலேயே அ.இ.ம.கா.வுக்கு இந்த சிக்கல்நிலை தோன்றியுள்ளது. 

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வ­ரினால் செய­லாளர் நாய­க­மான தன்னை கட்­சியின் யாப்­பின்­படி பதவி நீக்கம் செய்ய முடி­யா­தெ­னவும் தன்னை பதவி நீக்­கி­விட்டு எஸ்.சுபைர்­தீனை செய­லா­ள­ராக நிய­மித்­துள்­ளமை கட்­சியின் யாப்­புக்கு முர­ணா­ன­தெ­னவும் வை.எல்.எஸ்.ஹமீட் நீதி மன்றில் வழக்­கொன்­றினைத் தாக்கல் செய்­தி­ருந்தார்.

செய­லாளர் பதவி நிய­ம­னத்­துக்கு இடைக்­கால தடை­யுத்­த­ர­வொன்­றினைக் கோரி­யி­ருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 6 ஆம் திகதி வழங்­கப்­ப­ட­வி­ருந்த நிலையில் தீர்ப்பு வழங்­கு­வது எதிர்­வரும் மார்ச் 9 ஆம் திக­திக்கு பிற்­போ­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இவ்­வி­வ­காரம் கட்­சியின் உள்­ளூ­ராட்சி தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் பாத­க­மாக அமை­யுமா என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் செய­லாளர் எஸ்.சுபைர்­தீனை தொடர்பு கொண்டு வின­விய போது அவர் பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்தார். “வை.எல்.எஸ்.ஹமீட் செய­லாளர் பதவி நிய­ம­னத்­துக்கே இடைக்­கால தடை­யுத்­த­ரவு கோரி­யுள்ளார்.

இது உள்­ளூ­ராட்சி தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளையும் கட்சி போட்­டி­யி­டு­வ­தையும் பாதிக்­காது வழக்கு தீர்ப்பு வழங்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு தேர்தல் நடை­பெ­று­மாயின் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு கட்சி தேர்தல் நட­வ­டிக்­கை­களைத் தொடர உத்­த­ரவு வழங்­கு­வ­தற்கு அதி­கா­ர­மி­ருக்­கி­றது. கட்­சிக்கு மக்­க­ளி­ட­முள்ள ஆத­ரவு, செல்­வாக்கு என்­ப­ன­வற்­றினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் தீர்­மானம் மேற்­கொள்வார் என்றார். 

வை.எல்.எஸ்.ஹமீட்டை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்டு செய­லாளர் நாயகம் பதவி தொடர்­பாக கருத்து வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு விளக்­க­ம­ளித்தார். 

‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் பிரச்­சினை தற்­போது தீர்க்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் பிரச்­சினை முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் பிரச்­சி­னை­யி­லி­ருந்தும் வேறு­பட்­ட­தாகும்.

வெளிப்­ப­டையில் சில ஒற்­றுமை தோற்­றப்­பா­டுகள் இருக்­கின்ற பொழு­திலும் கூட அ.இ.ம. காங்­கி­ரஸின் பிரச்­சினை என்­பது ஒரு முழு­மை­யான தேசிய பட்­டியல் பிரச்­சினை அல்ல. நான் ஒரு போதும் தேசிய பட்­டியல் எம்.பி. பதவி கோரி­யி­ருக்­க­வில்லை. நான் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான ஆயத்­தங்­க­ளையே செய்து கொண்­டி­ருந்தேன்.

ஆனால் 6 மாத கால­மாக கட்­சியின் தலைவர் தேர்­தலில் நான் போட்­டி­யி­டு­வதைத் தவிர்ப்­ப­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருந்தார். இந்தப் பின்­ன­ணி­யிலே தேசி­யப்­பட்­டியல் பிரச்­சினை எழுந்­தது. என்னை தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தி­லி­ருந்தும் தடுத்தார் என்­றாலும் நான் தேசியப் பட்­டியல் விட­யத்தில் எது­வித ஆர்­வமும் காட்­ட­வில்லை. 

2015 செப்­டெம்பர் மாதம் 17 ஆம் திகதி தேர்தல் நடந்­தது. செப்­டெம்பர் 20 ஆம் திகதி இரவு 10மணிக்கு சிறி­கொத்­தா­வி­லி­ருந்து தேர்­தல்கள் ஆணை­யா­ள­ருக்கு தேசி­ய­பட்­டியல் விபரம் அனுப்­பப்­பட்­டது. அன்று இரவு 12 மணிக்கும் 1 மணிக்­கு­மி­டையில் கட்சித் தலை­வரை செய­லாளர் நாயகம் பதவி நீக்­கி­விட்­ட­தாக முக­வ­ரி­யில்­லாத ஒரு முக­நூலில் செய்தி வெளி­யா­கி­யது. 

21 ஆந் திகதி கட்­சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் சட்­டத்­த­ர­ணி­களை அழைத்­துக்­கொண்டு தேர்தல் ஆணை­யா­ள­ரிடம் சென்றார். அதே 21 ஆம் திகதி 10 வேட்­பா­ளர்­களின் பெயரில் எனக்­கெ­தி­ராக சேறு பூசும் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது.

அதனைத் தொடர்ந்து 5 நட்­சத்­திர ஹோட்­டலில் நான் கட்­சி­யி­லி­ருந்தும் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக ஊடக மாநாடு நடத்தி அமைச்சர் ரிசாத் அறி­வித்தார். என்­றாலும் நான் எது­வித அறிக்­கையும் விட­வில்லை. ஒரு சிறிய பேட்­டி­யொன்­றி­னையே வழங்­கி­யி­ருந்தேன்.

அந்தப் பேட்­டியில் கட்­சியின் யாப்­பின்­படி தலை­வரை செய­லா­ளரோ? செய­லா­ளரை தலை­வரோ பதவி நீக்க முடி­யா­தென்றும் கட்­சியின் தலைவர் என்னை இடை­நி­றுத்­தி­யது தொடர்­பாக எழுத்து மூலம் அறி­விக்­கவும் இல்லை எனவும் கூறி­யி­ருந்தேன். 

இந்­நி­லை­யிலே கட்­சியின் தலைவர் தேர்தல் ஆணை­யா­ள­ருக்குக் கடிதம் எழு­தி­யி­ருந்தார். அதற்­கான விளக்­கங்­க­ளையும் நான் வழங்­கி­யி­ருந்தேன். 

இந்­நி­லை­யிலே கட்­சியின் யாப்­பினை பின்­பற்­றாது பேராளர் மாநாட்­டினைக் கூட்டி செய­லாளர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்டார். முஸ்லிம் காங்கிரஸில் ஒரு தனிநபருக்கு அதிகாரம் இருப்பது கூடாது என்று போராடித்தான் நாம் அக்கட்சியிலிருந்து வெளியேறி அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆரம்பித்தோம்.

ஒரு தலைமைத்துவ சபையை யாப்பில் குறிப்பிட்டோம். எனது போராட்டம், கொள்கை மாற்றம் இதய சுத்தியுடனான போராட்டமே தவிர ஒரு தேசியப் பட்டியல் போராட்டமல்ல. 

அதேநேரம் எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் வை.எல்.எஸ்.ஹமீட் பாராளுமன்றம் சென்று விடக்கூடாது என்று திட்டம் தீட்டப்பட்டுச் செயற்பட்டுள்ளமை தெளிவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி - விடிவெள்ளி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -