அப்துல்சலாம் யாசீம்,ஏ.எஸ்.எம்.தாணீஸ், எம்.என்.எம்.புஹாரி,-
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 4.5 கிலோமீட்டர் தூரம் கொண்ட நாவலடி - சம்பூர் வரையிலான வீதி இன்று 13 செவ்வாய்கிழமை உத்தியோகபூர்வமாக இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் எதிர்க்கட்சித் தலைவரும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது. புனர்வாழ்வு.மறுசீரமைப்பு.மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் 53.7 மில்லியன் செலவில் இலங்கை கடற்படைத்தளத்தினால் இவ்வீதி புணரமைப்பு செய்யப்பட்டது.
மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ,கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான சி.தண்டாயுதபாணி,ஆரியவதி கலப்பதி,துரைராஜசிங்கம் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்னசிங்கம்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.நாகேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



