முஸ்லிம்கள் சார்பில் குரல் கொடுத்தவர் ரத்னசிறியின் மறைவுக்கு ஹிஸ்புல்லா இரங்கல்

டந்த காலங்களில் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தலைதூக்கிய சந்தர்ப்பத்தில் அதற்கு எதிராக முஸ்லிம் சார்பில் குரல் கொடுத்த ஒரு சிறந்த தலைவர் ரத்னசிறி விக்கிரமனநாயக்க. அவரது மறைவு முஸ்லிம்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். 

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினரான ரத்னசிறி விக்கிரமனாயக்க ஒரு நேர்மையான அரசியல்வாதி. 1962 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட அவர் கட்சியில் அமைப்பாளர், உப தலைவர் என பல பதவிகளை வகித்து கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பெரும் சேவையாற்றியர். 

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது ஆட்சிக்காலங்களில் இருமுறை பிரதமர் மந்திரியாக பதவி வகித்த இவர் தன்னால் முடியுமான சேவைகளை நாட்டுக்கு ஆற்றியுள்ளார். அதில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சமாதானம் ஏற்படுத்துவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி – பங்களிப்பு மிகமுக்கியமானவை. விசேடமாக, கடந்த காலங்களில் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் அரங்கேறிய காலத்தில் நடுநிலை அரசியல்வாதியாக முஸ்லிம்கள் சார்பில் குரல் எழுப்பியிருந்தார். 

இவர் நாட்டுக்காக மேற்கொண்ட சேவைகளை சிறுபான்மை சமூகம் நன்றியுடன் நினைவுகூற வேண்டும். - என அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -