பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டம் இடை நிறுத்தப்பட்டமைக்கு ரிசாட், அமீர் அலியே காரணம்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
நேற்று மட்டக்களப்பில் இருக்கும் மங்கள பெளத்த விகாரைக்கு பொதுபலசேனாவின் செயலளர் ஞானசார தேரரினல் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆர்ப்பாட்டமானது மட்டக்களப்பு பிரதேசத்தினை நோக்கி செல்லவிடாது இடை நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டமைக்கு அகில இலங்கை மக்கள் கங்கிரசின் தேசிய தலைமையான அமைச்சர் றிசாட் பதுர்டீனும் அதன் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலி ஆகியோர்களினால் எடுக்கப்பட்ட நடவடிக்கையே முக்கிய காரணம் என ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.ரி.அஸ்மி தெரிவித்த அதே சமயத்தில் குறித்த அமைச்சர்களுக்கு தனது வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

மேலும்.. குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த அஸ்மி. அல்லாஹ்வையும் அவனுடைய இறுதி தூதர் றசூ (ஸல்) அவர்களையும் பொதுபலசேனாவின் அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அவதூராக பேசிய விடயம் சம்பந்தமாக அமைச்சர் றிசாட் பதுர்டீன் பொலீஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாகவும் நேற்று பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலி சட்ட மறு சீரமைப்பு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகள ரத்நாயக்காவினை சந்தித்து குறித்த பொதுபல சேனாவின் மட்டக்களப்பு ஆர்ப்பாட்டத்தினை உடனடியாக இடை நிறுத்துமாறு வேண்டிக்கொண்டமையினால் அமைச்சர் சாகள ரத்நாயக்க பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் நீதி மன்றத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக பொலிசார் தங்களினுடைய கடமையினை சரிவர செய்து இந்த நல்லாட்சியில் சட்டம் சரிவர நிலை நாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு சட்டம் சரிவர நிலை நாட்டப்பட்டதற்கு பொலிசாருக்கு தனது நன்றியினை தெரிவித்துள்ள அஸ்மி ..பொதுபல சேனாவும், அதன் செயலாளர் ஞானசார தேரரும் மட்டக்களப்பில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு அவர்களினுடைய தோல்வியானது மட்டக்களப்பிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என முகநூல்களிலே தமிழ் பேசும் சமூகமும், அதிலும் முக்கியமாக முஸ்லிம் வாலிபர்கள் அறிக்கை விடுகின்றமையானது பொதுபலசேனா போன்ற பெரும்பான்மை சமூகத்தில் செயற்படுக்கின்ற இனவாத அமைப்புக்களை தூண்டி விடுகின்ற செயற்பாடாக அமைந்து விடும். அது மட்டுமல்லாமல் வட கிழக்கிற்கு வெளியில் சிங்கள சமூகத்திற்கு மத்தியில் வாழுக்கின்ற முஸ்லிம்களுக்கு பாரிய அச்சுறுத்தலாகவும் அமைந்து விடும் என தெரிவித்துள்ளார்.

ஆகவே இவ்வாறான நிலைமைகளில் பாரதூரமாக வெடிக்கவிருந்த குறித்த பிரச்சனையானது இடை நிறுத்தப்பட்டமைக்கு முதலில் முஸ்லிம் சமூகமானது அல்லாவிற்கு நன்றி செலுத்தும் அதே நேரத்தில் தமிழ் பேசுகின்ற தமிழ் சமூகமும் முஸ்லிம் சமூகமும் சமூகவலை தளங்களை நிதானமாக சிந்தித்து கையாளுமாறும் வேண்டிக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -