அப்துல்சலாம் யாசீம்-
கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குள் அமைந்திருக்கும் கச்சகொட்டித்தீவு வைத்தியசாலையை தரமுயர்த்தி மக்களுக்கு சிறந்த சேவை வழங்கும் வைத்தியசாலையாக மாற்றித் தருமாறு கோரி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கிண்ணியா சூரா சபை கோரியுள்ளது.
கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட மக்களுக்கு மத்திய இடமாக இருக்கும் இந்த வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதன் மூலமாக அந்த பிரதேச மக்கள் அதிக பயனடைவர் எனவும் பொருளாதார நெருக்கடி .மீள் குடியேற்ற கிராமங்கள் .பொது போக்கு வரத்து வசதியின்மை போன்ற முக்கிய காரணங்களையும் மக்களின் சன அடர்த்தியையும் கவனத்தில் கொண்டு இக் கோரிக்கையை பரிசீலிக்குமாறு இந்த மகஜரில் கோரப்பட்டுள்ளது.
இதன் பிரதிகளை கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல.எம்.நஸீர் மற்றும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனைக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் சூரை சபையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
