நேற்று மட்டும் இலங்கைக்கு 09 கோடி வருமானமாம்....!!

தனியார் பஸ் உரிமையாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நேற்று நிறைவடைந்த நிலையிலும் இ.போ.சபைக்கு சுமார் ஒன்பது கோடி ரூபா வருமானமாக கிடைத்துள்ளது.

நேற்று மட்டும் இலங்கை போக்குவரத்து சபைக்கு கிடைத்த வருவாய் சாதனைக்குரிய முறையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு கைவிட்டாலும் சில பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட பஸ்களே சேவையில் ஈடுபட்டிருந்தன.

இதன் காரணமாகவே இலங்கை போக்குவரத்து சபைக்கு குறித்த வருமானம் கிட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக சனிக்கிழமைகளில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் ஆறு கோடியே எண்பது இலட்சம் ரூபா வருவாயாக கிடைக்கும், ஆனால் நேற்று 3 கோடி ரூபா மேலதிகமாக 9 கோடி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -