எம்.எம்.ஜபீர்-
மத்தியமுகாம் 12ஆம் கொளனி கத்ரினா விளையாட்டுக் கழகத்தின் 3ஆவது ஆண்டு நிறைவு விழா கத்ரினா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.எம்.பசீல் தலைமையில் 5ஆம் கொளனி அமிர் அலி பொது மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக நாவின்வெளி பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபீவுள்ளாஹ் கௌரவ அதிதியாக சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீம் அதிதிகளாக மெஸ்ரோ அமைப்பின் உயர் பீட உறுப்பினரும் நாவிதன்வெளி அமைப்பாளருமான ஏ.எம்.மஹ்றூப், அல்-அமான சமூக சேவை அமைப்பின் ஸ்தாபக தலைவர் எம்.வீ.நபாஸ், கல்விமாண்கள், பள்ளிவாசல் தலைவர்கள், விளையாட்டு கழகத்தின் மூத்த வீரர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது நாவிதன்வெளி பிரதேசத்தில் 2016ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள், விளையாட்டுக் கழகத்தின் வீரர்கள் கௌரவிப்பு மற்றும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி என்பன இடம்பெற்றது.







