ஊருக்குள் புகுந்த கடலும் ஓட்டம் எடுத்த திருக்கோவில் மக்களும் - படங்கள் இணைப்பு


காரைதீவு நிருபர் சகா-

ரலாற்றுப்பிரசித்திபெற்ற ஸ்ரீ திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி
ஆலயத்தினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமைஅதிகாலை கடல் புகுந்துள்ளது.

கோயிலை அடுத்துள்ள சுமார் 500மீற்றர் கடற்கரையோரத்தினுள் கடல்நீர்
உட்புகுந்துள்ளது. கடலிலிருந்து சுமார் 100மீற்றருக்கும் கூடுதலான தூரம்
ஊருக்குள் கடல்நீர் வந்துள்ளது. அதனால்n மக்கள் பரபரப்புடன் சுனாமியென்று
பயந்து ஓடியுள்ளனர்.ஆலய சூழலில் மண்புழுக்கள் இறந்துகாணப்பட்டன.

ஆலய நிருவாகத்தினர் உடனடியாக ஆலயத்தில் ஒன்றுகூடினர். ஆலயதலைவர்
சுந்தரலிங்கம் சுரேஸ் வண்ணக்கர் வ.ஜெயந்தன் பொருளாளர் எஸ்.லோகநாதன்
உள்ளிட்ட குழுவினர் ஆலய ஒலிபெருக்கிமூலம் மக்களுக்கு
அறிவித்தனர்.மக்களும் வந்துசேர்ந்தனர்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் ஸ்தலத்திற்கு
விரைந்து ஆலய நிருவாகத்தினருடன் கலந்துரையாடி சேத
விபரங்களைப்பார்வையிட்டார்.

அங்கிருந்த மீனவர்களது வலை தோணிகளும் வெகுவாக சேதமடைந்திருந்தன. மீனவர்
சங்கத்தலைவர் கே.ஜெயசிறில் கடல்நீர் ஊருக்குள்வந்தமை ஆலயத்தையும்
மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளதமை பற்றியும்
எடுத்தியம்பினார்.
நபம் புதிய நகரஅபிவிருத்தித்திட்டத்தையோ புதிய பாதையையோ கேட்கவில்லை.
இருக்கின்ற எமது ஆலயத்தையும் மக்களையும் காப்பாற்ற தடுப்புகல்வேலி
அமைத்துர்hதாருங்கள் என்றார்.

ஆலயத்திலருகிலுள்ள தென்னந்தோப்புக்குள்ளும் கடல்நீர் புகுந்துள்ளது.
அதன்முன்னாலுள்ள கடற்கரைப்பரப்பில் இரண்டுக்கு மேற்பட்ட தென்னைகளை கடல்
காவுகொண்டுள்ளது. மேலும் பல தென்னை மரங்களை அரித்து
உள்ளெடுத்துவருகின்றது.
ஆலயத்தினுள் அண்மையில் நடப்பட்ட காயா மரங்களனைத்தும் கடல்நீர் உட்புகுந்த
காரணத்தினால் சேதமாகியுள்ளன.

அங்கு மண்புழுக்கள் இறந்து கிடக்கக்காணப்படன.
ஆலயததலைவர் சு.சுரேஸ் அங்கு கூறுகையில் இன்று அதிகாலை கடல்நீர்
பெருக்கெடுத்தனால் எமது ஆலயத்துனுள் உட்புகுந்துள்ளது.


நாம் அண்மையில்
நாட்டிய மரக்கன்றுகள் பாதிக்கப்பட்டுள்ளன.அதுமட்டுமல்ல மீனவர்களும்
வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆலய தீர்த்தமாடும் பிரதேசம் கடலினுள்
காவுகொள்ளப்பட்டிருக்கின்றது. இங்கே வலுவான கற்சுவர் அமைத்தால்மட்டுமே
பழம்பெரும் ஆலயத்தையும் ஊரையும் காப்பாற்றலாம் என்றார்.

ஆலயநிருவாகத்தினர் கோடீஸ்வரன் எம்பியிடம் ஆலய முன்னாலுள்ள கடல்பரப்பில்
தடுப்பு கற்சுவர் அமைத்து ஆலயத்தையும் ஊரையும் காப்பாற்றுமாறு கேட்டனர்.
அதற்கு பலகேதாடீருபா செலவாகும் என்றாலும் நான் முயற்சி செய்கின்றேன் என்றார்.

மீனவர்களின் பிரச்சினைகள் பற்றியும் விரிவாககலந்ரைதுயாடப்படன.
கோடீஸ்வரன் எட்.பி. கடல் காவுகொள்ளப்பட்டுவரும் பிரதேசங்களைப்பார்வையிட்டார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -