இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்க்ஷி டயஸ் விக்ரமசிங்கவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணைகளுக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவரை நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்றதை தான் மிகவும் அருவருப்புடனும், மோசமாகவும் கண்டிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்தே ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்க்ஷி டயஸ் தனது இராஜினாமாவை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.