என்னுடைய பணியை நீங்கள் இலகுபடுத்தியிருக்கிறீர்கள் - அமைச்சர் ஹக்கீமிடம் ரீட்டா தெரிவிப்பு

ஷபீக் ஹுசைன் -
ந்நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகள் குறித்த நிரந்தரமான தீர்வைக் காண்பதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்; அதற்கான சுயாதீனமான தேசிய ஆணைக் குழுவொன்றை அமைக்கவேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என ஐ.நா சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கான விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐஷாக் நாடேயிடம் விஷேட கோரிக்கையாக முன்வைத்தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முனித உரிமைகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கான விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐஷாக் நாடேயி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை கட்சியின் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (18) மாலை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

பிரஸ்தாப சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

நாங்கள் எவற்றையெல்லாம் எங்களது அறிக்கையில் உள்ளடக்க முயற்சிக்கின்றோமோ அவற்றையெல்லாம் நீங்கள் இப்பொழுது எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தது மிகுந்த ஆச்சரியமளிக்கின்றது என்று ரீட்டா ஐஷாக் நாடேயி சொன்னார். முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நீங்கள் சரிவர அடையாளம் கண்டிருக்கின்றீர்கள் என்றும், நீங்கள் இவ்வாறன விடயங்களில் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றீர்கள் என்றும் அவர் கூறினார். என்னுடைய பணியை நீங்கள் இலகுபடுத்தியிருக்கிறீர்கள் என்றார்.

நாங்கள் எழுத்து மூலமாகவும் எங்களது கோரிக்கைகளையும், கவனயீர்ப்புகளையும் அவரிடத்தில் அறிக்கையாக இன்றுகையளித்திருக்கின்றோம். இடம்பெயர்ந்தமக்கள் சார்பாகவும், அதேவேளைமக்கள் பறிகொடுத்த காணிகளை மீளப்பெறுவதிலுள்ள சிரமங்களையும் அவரது கவனத்திற்கு கொண்டுவந்தோம்.

வடக்கில் தமிழ் மக்களதுகாணிகளை இராணுவம் கையகப்படுத்தியிருப்பதுபோல, கிழக்கில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவமும், முன்னர் விடுதலைப் புலிகளும் கையகப்படுத்தியிருப்பது பற்றியும் முறையிட்டோம்.

இனரீதியாக மட்டுமன்றி, சமயரீதியாகவும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கும், வணக்கஸ் தலங்களுக்கும் எதிராக தீயசக்திகள் மேற்கொண்டதாக்குதல் நடவடிக்கைகள் பற்றியும் அவரிடம் விபரித்தோம். ஆத்திரமூட்டும் வகையிலான பேச்சுகள் உண்டு பண்ணிய பாரதூரமானதும், விபரீதமானதுமான செயல்களையும், விளைவுகளையும் சுட்டிக்காட்டினோம்.

இந்நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகள் குறித்த நிரந்தரமான தீர்வினைக் காண்பதற்கு ஒரு முயற்சினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்; அதற்கான சுயாதீனமான தேசிய ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்பதை எங்களது விஷேட கோரிக்கையாக அவரிடம் முன்வைத்தோம்.

எமது கருத்துக்களை கவனமாக செவிமடுத்த ரீட்டா ஐஷாக் நாடேயி அவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இல்லாமல் செய்வதற்கான சூழலை நிரந்தரமாக உருவாக்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து அவரது இறுதி அறிக்கையில் குறிப்பிடவிருப்பதாகச் சொன்னார்.

இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ், கிழக்குமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் ஆகியோரும் பங்குபற்றினர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -