8 வயது மகனைக் கட்டிப்பிடித்தபடி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த தாய் - உருக வைக்கும் காரணம்

ஷ்யா நாட்டில் 8 வயது மகனை கட்டிப்பிடித்துக்கொண்டு அவரது தாயார் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபீரியாவில் உள்ள Omsk நகரில் Anna Ozhigova(33) என்ற தாயார் தனது 8 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. எனினும், சில வருடங்களுக்கு முன்னால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம் மனைவியின் மூக்கு தான். இவருடைய மூக்கு அளவில் சிறியதாக இருந்ததால் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்து மூக்கின் அளவை பெரிதாக்கியுள்ளார். ஆனால், சிகிச்சைக்கு பிறகு அவரது மூக்கு பன்றியின் மூக்கு போல் பெரிதாக உள்ளதாக அவரது கணவர் அவமதித்து வந்துள்ளார்.

இதே நிலை நீடித்ததால் மனைவியை விவாகரத்து செய்து விட்டு கணவர் பிரிந்து சென்றுள்ளார். பின்னர், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது 8 வயது மகனுடன் தாயார் தனியாக வசித்து வந்துள்ளார். ஆனால், அவருடைய மூக்கின் தோற்றத்தை கண்டு அவர் மிகவும் வேதனை அடைந்துள்ளார். இதனால் அவர் வெளியே செல்வதை தவிர்த்து வந்துள்ளார்.

இருப்பினும், அவர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் தோல்வியில் முடிந்து அவருக்கு வேதனையை அளித்து வந்துள்ளது. இந்நிலையில், விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அவர் நேற்று முன் தினம் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தனது மகனை கட்டிப்பிடித்துக்கொண்டு மாடியிலிருந்து குதித்துள்ளார்.

இதில், தாய் மற்றும் மகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். கடிதம் மற்றும் பிற ஆதாரங்களை சேகரித்துள்ள பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -