முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட காணியின் உரிமையாளர் தான் அல்ல என்று பசில் ராஜபக்ஷ கூறியிருப்பதனால், மல்வானை பிரதேசத்தில் உள்ள அந்த இடத்தையும் அங்கு அமைந்துள்ள வீட்டையும் ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பூகொடை நீதவான் டீ. ருவான் பத்திரண இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பூகொடை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மல்வானை, கங்கபட வீதியில் அமைந்துள்ள 16 ஏக்கர் நிலப்பரப்புடனான வீடு, பசில் ராஜபக்ஷவினால் தவறான வழியில் பெற்றுக் கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படு தொடரப்பட்ட வழக்குில், அந்த காணியும் வீடும் தன்னுடையதல்ல என்று பசில் ராஜபக்ஷ தரப்பால் கூறப்பட்டுள்ளதையடுத்து, அது உரிமையாளர் அற்ற சொத்தா அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்தக் காணியையும் அங்கு அமைந்துள்ள வீட்டையும் பகிரங்க ஏல விற்பனை செய்யுமாறும், வழக்கு மீண்டும் ஜனவரி மாதம் 10ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
