ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
சம்மாந்துறை, நெய்னாகாடு, பட்டம்பிட்டி பிரதேசத்தில் விவசாயிகளின் பல்வேறு நீர்ப்பாசனத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, ரூபாய் 41 கோடி செலவிலான நீர்ப்பாசன அபிவிருத்திப்பணிகளை நேற்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆரம்பித்து வைத்தார்.
இப்பிரதேச விவசாயிகளின் மிக நீண்ட காலத் தேவைகளான திராஓடை அணைக்கட்டு திறந்து வைக்கப்பட்டதுடன், மற்றுமொரு தேவையான வீரயடி அணைக்கட்டு புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வும் இடம் பெற்றது.
சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் திருமதி.எம்.எஸ்.றிப்னாஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வுகளில் அம்பாரை மாவட்ட மேலதிக நீர்ப்பாசனப் பொறியியலாளர் எம்.எஸ்.எம்.நவாஸ், நீர்ப்பாசனத் திட்ட முகாமையாளர் ஏ.எம்.எம்.மாஹீர், பிரதேச செயலாளர்களான ஏ.மன்சூர், ஐ.எம்.ஹனீபா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பௌஸ், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சஃபீர், இணைப்பாளர்களான யூ.எல்.எம்.பசீர், ஏ.எம்.தபீக் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்வணைக்கட்டுக்கள் மூலம் பட்டம்பிட்டி பிரதேசத்திலுள்ள 6307 ஏக்கர் நெல்வயல்களுக்கும் எந்த வித தங்கு தடைகளுமிண்றி நீர்ப்பாசனம் வழங்க முடியுமென்றும், இதனால் இப்பிரதேசத்தில் வாழும் சுமார் முப்பதாயிரத்திற்கும் (30,000) அதிகமான விவசாயிகள் நன்மையடையவுள்ளனர் என்றும் பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் திருமதி.எம்.எஸ்.றிப்னாஸ் தெரிவித்தார்.


