முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் உள்ளிட்டவர்களை அரசியலில் இருந்தும் ஒழிப்பதற்கான சூழ்ச்சியை பிரதமர் முன்னெடுக்கின்றார். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன் வைத்த குற்றச்சாட்டிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பதில் எதுவென்பதை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.
பசுவிற்கும் எறுமைக்கும் ஒன்றித்து பயணிக்கவோ வாழவோ முடியாது. போலியான நிதி மோசடி குற்றச்சாட்டுக்களை முன் வைத்து கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்களை பழிவாங்கப்படுகின்றனர். மிக விரைவில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய 10 பேரின் மோசடிகளை வெளிப்படுத்துவோம். அதற்கான அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டு விட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்~வின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
