அவர் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறித்தவாறு தெரிவித்திருந்தார். அறியாமை என்னும் இருள் நீக்கி வெற்றியையும் ஒளிமயமான சிந்தனையையும் இந்த தீபத் திருநாள் பெற்றுத் தர வேண்டும் என்றும்இ முற்றிலும் தூய்மையான மனதோடு இந்த தீபாவளியை அனைத்து தமிழர்களும் கொண்டாட தமது இனிமையான வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும்
நரகாசுரனை வதைத்த தினத்தை வீடுகளில் தீபஒளி ஏற்றி மனஇருள் நீக்கி தீபாவளி பண்டிகையாக கொண்டாடும் இத்தருணத்தில் தமிழர்களது பாரம்பரியமான பண்பாடுகளால் நம் திறமைகளை வளர்த்து நாட்டை ஒளி நிறைந்ததாக மாற்ற வேண்டும் என்றும் நல்ல மழை பொழிந்து வேளாண்மை செழிப்பாக வேண்டும் என்றும்நமதினத்தின் நலிந்தோர் நலனுக்கான நல்ல பல புதிய திட்டங்கள் வர வேண்டும் எனவும் தாம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த தமிழர்களது வாழ்விலும் ஒளிதீபம் ஏற்றி மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க வேண்டும் எனவும் உலக மக்கள் தமிழர்களின் செயல் திறனை மெச்சி போற்றும் வகையில் நம்மனைவரதும் வாழ்வு செழிக்க வேண்டும் எனவும் கூறி தனது மனமார்ந்த தீப திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்...
சமகாலத்தில் ஆசிரியர்கள் அதிபர்கள் எதிர்நோக்கும் அனைத்துப்பிரச்சினைகளுக்கும் மிகவரைவில் தீர்வு கிடைக்குமென இன்றைய நாளில் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.