க.கிஷாந்தன்-
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை கோரி 18.10.2016 அன்றும் தமது எதிர்ப்பினை தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அந்தவகையில் மலையகத்தில் வெலிமடை தோட்ட தொழிலாளர்கள் வெலிமடை – ஊவா பரணகம பிரதான வீதியில் வெலிமடை சந்தைக்கு முன்னால் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது கிழமைக்கு 6 நாள் வேலை வேண்டும், எங்களது 18 மாதங்களுக்கான நிலுவை பணம் வேண்டும், என பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியமை குறிப்பிடதக்கது.