அஷ்ரப் .ஏ சமத்-
கல்வியமைச்சின் ” அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலைகள் 7000 பாடசாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ்” பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மானின் நடவடிக்கையின் பேரில் மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தியாலயமும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.
இத் திட்டத்தில் ஆரம்பக் கட்ட நிகழ்வு இன்று (1)ஆம் திகதி கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவாசமினால் 4 மாடிகளைக் கொண்ட வகுப்பரைறக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வு கல்லுாாியின் அதிபா் தலைமையில் நடைபெற்றது. நிதியமைச்சா் ரவி கருநாயக்க, பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் மற்றும் மேல் மாகாணசபை உறுப்பிணா்கள் மொஹமட் அக்ரம், எம். பாயிஸ், அர்சத் நிசாமுதீன் ஆகியோறும் கலந்து கொண்டனா்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் -
இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் ஆகிவிட்டது இதுவரை இக் கல்லுாாி அபிவிருத்தி அடையவில்லை. கடந்த காலங்களில் மாகாண சபையில் இருந்த சகல முஸ்லீம் அங்கத்தவா்களும் உதவினாா்கள். .
ஆனால் இக் கல்லுாாியை கல்வியமைச்சரிம் பேசி நல்லாட்சி அரசின் புதிய கல்வி அபிவிருத்தித் திட்டத்தமான சிறந்த பாடசாலை திட்டத்தின கீழ் அபிவிருத்தி செய்வதற்காக நான் பாடுபட்டேன். ஆனால் இத்திட்டம் இந்த அபிவிருத்தி நிதி கட்டிங்கள் வேண்டாமென இப் பிரதேச அரசியல் வாதிகள் தனவந்தா் ஒருவா் முட்டுக்கட்டை விதித்தாா்கள். அவா்கள் இந்தத் திட்டத்தினை நிறுத்துவதற்காக பட்ட அவஸ்தையும் நடவடிக்கையும் கடந்த 20 வருட காலத்திற்குல் செயல்பட்டிருந்தால் இப் பாடசாலை இவ்வாறு இருந்திருக்காது. கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகள் போன்று முன்னேறியிருக்கும். அதுமட்டுமல்ல இந்தப் பிரதேசத்தின் வாழும் மாணவா்கள் இவ்வாறு கல்வியில் பின் தள்ளப்பட்டிருக்க மாட்டாா்கள்.
நான் கொழும்பு மத்திய தொகுதியில் மக்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் மாகாணசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பிணராக வந்தேன். எனக்கு இப்பிரதேச பாடசலைகளை அபிவிருத்தி செய்வதற்கு சகல உரிமைகளும் உண்டு. இந்த புதிய 7000 ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தினால் இந்தப் பாடாசலைக்கு 63,950 மில்லியன் ருபா செலவில் பௌதீக, மற்றும் கட்டிட வளங்கள் கிடைக்கும் . இதனைத் தடுக்கின்றனா். கல்விக்கு என உதவி செய்ய வருகின்ற சகல தனவந்தா்களுக்கும் இப் பாடசாலையின கதவு திறந்தே இருக்கும். ஆனால் ஒரு, இருவா் அ்ரசினால் வழங்கும் அபிவிருத்திகளை இல்லாமாக்கல் செய்வதற்கு பாரிய பிரயத்தனம் செய்கின்றனா். மாளிகாவத்தை மட்டுமல்ல கொழும்பு பிரதேசத்தின் கல்வி அபிவிருத்திற்காக நாங்கள் எதிா்கட்சி வரிசையில் அமா்ந்து தற்பொழுது பாராளுமன்றம் சென்று இந்த திட்டத்தினை எமது பாடசாலை அமுல்படுத்துவதற்காக அதிகாரிகள் அரசியல் தலைமைகளை அனுகி கொண்டுவருவதை தடுக்கின்றனா். எனக்கு வாக்களித்த மக்களுக்காக நாம் செய்கின்ற அபிவிருத்திகளை ஒரு போதும் தடை விதிக்க வேண்டாமென கேட்டுக் கொள்ள விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான வேண்டிக் கொண்டாா்.
இங்கு உரையாற்றிய கல்வியமைச்சா் அகிலவிராஜ் காரியவாசம் -
அருகில் உள்ள சிறந்த பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தில் கல்வியமைச்சா் என்ற ரீதியில் கொழும்பு மாவட்டத்திலேயே தனது முதலாவது பாடசாலை அபிவிருத்தியை அதுவும் மாளிகாவத்தை முஸ்லீம் பாடசாலையான தாருஸ்ஸ்லாம் வித்தியாலயத்தில் ஆரம்பிப்பதில் மிக்க மகிழ்சியடைகின்றேன். இப் பிரதேசம் மக்கள் கூடுதலானவா் ஜனாதிபதி மற்றும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முஜிபு ரஹ்மான் போன்றோாகளை பெரும்பான்மையாக வாக்கு அளித்த ஒரு தொகுதியாகும். . கல்வி வரலாற்றில் 70000 பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் இதுவே முதற்தடவையாகும். கடந்த அரசாங்கம் முழு கொழும்பு மாவட்டத்திற்கே 7000 மில்லியனே கல்விக்கு செலவழித்து. ஆனால் இத் திட்டத்தின் கீழ் ஒரு பாடசாலைக்கு 63,950 மில்லியன் ருபா செலவழிகக்ப்படுகின்றது. இத்திட்டத்திற்கான சகல திட்டங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கி கல்வியமைச்சு கங்கானிக்கும்.
அடுத்தவாரம் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு 852 பேர் சோ்த்துக் கொள்ளப்படுகின்றர். அத்துடன் ஆசிரியா்கள் நியமனம் வழங்கும்போது முஜிபு ரஹ்மான் வேண்டுகோள் விடுத்த பாடசாலைகளுக்கும் ஆசிரியா்கள் நியமிக்கப்படுவாா்கள் எனவும் கல்வியமைச்சா் அங்கு தெ்ரிவித்தாா்.