காதல் விளையாட்டு வினையானது : நடந்தது என்ன.?

மெக்சிகோவில் காதலி ஒருவர் தன்னுடைய காதலனுடைய கழுத்தில் செல்லமாக கடித்ததில் காதலன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. 17 வயதான ஜூலியோ மகியாஸ் என்ற இளைஞன் 24 வயதான பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்நிலையில் அந்த இளைஞன் தன்னுடைய வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு தன்னுடைய காதலியை அழைத்துள்ளார்.

ஜூலியோ மகியாஸ் தன்னுடைய காதலி மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து உணவு உண்ணும் நேரத்தில் வலிப்பு வந்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற ஜூலியோ அங்கு உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கு காரணம், கழுத்து பகுதியில் ஏற்பட்ட இரத்த உறைவால் இரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பு என அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்தார். மேலும் அவரது கழுத்தில் யாரோ கடித்திருக்கிறார் எனவும் ஹிக்கி என்னும் காதல் விளையாட்டால் இப்படி நடந்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

இதனால் ஜூலியோவின் குடும்பத்தினர் அவரது காதலியை கோபமாக பார்த்தனர். விஷயத்தை புரிந்து கொண்ட அந்த பெண் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். மேற்கத்திய நாடுகளில் ஹிக்கி என்னும் காதல் கடித்தல் பிரபலமானது. காதல் ஜோடிகள் ஒருவருக்கொருவர் கழுத்தில் கடித்து கடித்து விளையாடும் காதல் விளையாட்டு இந்த ஹிக்கி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -