காத்தான்குடியில் வீதி விபத்தை தடுக்க அடுத்தகட்ட நகர்வு..!

ஏ.எல்.டீன்பைரூஸ்-
காத்தான்குடி பிரதான வீதியில் அடிக்கடி இடம் பெற்று வரும் வீதி விபத்தினை தடுக்க அரசியல் தலைமைகளினால் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது அதிகமான வீதி விபத்துக்கள் மஞ்சல் கடவைகளில் இடம் பெறுகின்றன. அதனை தடுப்பதற்காக காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள பாதசாரிகளுக்கான மஞ்சல் கடவைகளுக்கு முன்னால் பெயின் மூலமான வேகத்தடை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இது இவ்வாறிருக்க

அதன் அடுத்த கட்டமாக காபட் மூலமாக இரண்டு இஞ்சி உயரத்தில் Speed Breaker வேகத்தடை தற்போது காத்தான்குடி பிரதான வீதியில் போடப்படுகின்றது இதன் மூலம் எந்த வகை வாகனமாக இருந்தாலும் இதனூடாக வேகமாக செல்ல முடியாது என அதிகாரிகள் இதன் போது தெரிவித்தனர். தற்போது காத்தான்குடி பிரதான வீதி குட்வின் சந்தியை இலக்காகக் கொண்டு மேற்படி Speed Breaker வேகத்தடை போடப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -