"சாய்ந்தமருதில் களைகட்டிய கலைஞர்களின் கரவாகுச் சந்தி" (Photos)

எம்.வை.அமீர்-
ரவாகு கலை இலக்கியச் சந்தியின் தொடக்க நிகழ்வும், முதலாவது அமர்வும் 2016-08-27 ஆம் திகதி சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் கரவாகுச் சந்தியின் ஸ்தாபகர் கவிஞர் எஸ். ஜனூஸ் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வுக்கு தென்கிழக்கின் மூத்த இலக்கிய கர்த்தாக்களும், கவிஞர்களுமான பாலமுனை பாரூக், ஆசுகவி அன்புடீன்,தீரன் ஆர்.எம்.நௌஷாத் ,கலாபூஷணம் கே.எம்.ஏ.அஸீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்விற்கு அதிதியாக கவிஞரும் எழுத்தாளருமான முபாரக் அப்துல் மஜீத் கலந்து சிறப்பித்தார்.

ஊடக அதிதியாக சிரேஷ்ட ஊடகர் எம்.வை.அமீர் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக Image Gate Digital Printing நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முஹம்மத் மபாஸ் கலந்து கொண்டார்.

கரவாகுச் சந்தி கலை இலக்கிய செயற்பாடுகள் இறை துதியுடன் ஆரம்பமானது. இதன் அறிமுகம் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி எஸ்.ஜனூஸ் விளக்கமித்தார். கரவாகுச் சந்தியின் எதிர்கால செயற்பாடுகள், நகர்வுகள்பற்றிய ஆலோசனைகள், கருத்துக்கள் பொது வெளி உரையாடலுக்கு விடப்பட்டது. இவ்வுரையாடலில் பாலமுனை பாரூக், ஆசுகவி அன்புடீன்,றியாஸ் குரானா ஆகியோர் பங்கு பற்றி ஆக்கபூர்வமான கருத்துக்களை முன் வைத்தனர். இலக்கியத்தின் பல்வேறு கூறுகள் பேசப்படுவதுடன், நல்ல நூல்களை பரிந்துரைத்தல்,நூலாய்வுகளின்தேவைகள் பற்றியும் இவ்வுரையாடலில் உணரப்பட்டது.

இதன் பின்னர், அண்மையில் மறைந்த தென்னிந்திய கவிஞர்களான நா.முத்துக்குமார்,குமரகுருபரன்,பஞ்சு அருணாச்சலம் ஆகியோரை நினைவு கூறும் உரையை எழுத்தாளர்,விமர்சகர் அப்துர் ரஸாக் நிகழ்த்தினார்.

சமகால இலக்கிய உரையாடல் எனும் தலைப்பில் இலக்கிய ஆய்வாளர்களான சிராஜ் மசூர், ஜெஸ்மி எம். மூஸா ஆகியோர் பேசினர். சிராஜ் மசூர் பாவலர் பஸீல் காரியப்பர் பற்றியும், அவர் படைப்புகளின் கனதி பற்றியும் சிறுவிளக்கமளித்தார்.

இன்றைய கரவாகுச் சந்தியின் கவியரங்கத்தில் தீரன் நௌஷாத், கலைப்பிறை வஹாப்தீன், Dr.நாஹூர் ஆரீப்,நபீஸா மபாஸ், நூராணியா,காத்தான்குடி எம்.ரீ.எம்.யூனூஸ், பாலமுனை முபீத், தெ.கி.ப. மாணவி- நுவரெலியா ரூமி ரிசானா, மருதூர் நூராணியா ஆகியோர் கலந்து சிறப்பாக கவி பாடினார்கள்.

இலக்கிய ஆர்வலரும், பாடகருமான அமீர் முஹம்மத் 'கப்பலுக்கு போன மச்சான்' பாடலை இரு குரல்களில் அருமையாக பாடினார். கவிஞர் றியாஸ் குரானாவின் மூன்று ஹாஷ்யங்கள் சபையை குதுகலிக்கச் செய்தன.

கரவாகுச் சந்தியின் இன்றைய முதல் அமர்வில் ஏனைய பங்காளர்களாக கவிஞர்களான மருத நிலா நியாஸ்,எழுகவி ஜெலீல், பொத்துவில் கிராமத்தான் கலீபா, மருதமுனை ஜமீல்,சின்னப் பாலமுனை முஹா,அக்கரைப்பற்று நாளீர், இமாம் அதனான், இறக்காமம் பர்ஸானா றியாஸ், பாடகர் ஏ.எம்.றியாஸ், ஹிஷாம் முஹம்மத்,
அட்டாளைச்சேனை நிஸ்ரி ஆகியோருடன் தெ.கி.ப. தமிழ்ச் சங்கத் தலைவர்,கவிஞர் றிழ்வான், மற்றும் அதன் மாணவிகளும் கவிதாயினிகளுமான ஏ.சப்றா, ஏ.எஸ்.எப்.மபாஸா,நித்யா ஆகியோருடன் இலக்கிய ஆர்வலர்களும் வருகை தந்தனர்.

கரவாகுச் சந்தியின் முதல் அமர்வின் நிகழ்ச்சிகளை கவிஞர் உவைஸ் முஹம்மத், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உளவளத்துணை உத்தியோகத்தர் எச்.எம்.எம். ஹப்ராத், ஆஷிக் முஹம்மத் ஆகியோர் மேற்கொண்டனர். அடுத்த கரவாகு இலக்கியச் சந்தி செப்டெம்பர் 24 ஆம் திகதி இடம்பெறவிருக்கிறது. அது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.


















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -