ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் நான் அண்மையில் இணைந்துகொண்டதையிட்டு எனது இணைவை தாங்க முடியாத acmc அமைச்சர் ரிசாட் அணியின் ஊடகப்பிரிவு அண்மையில் வெளியிட்டுள்ள செய்தியானது மிகவும் மன வேதனை அளிக்கிறது. அவர்களுக்காக பெரிதும் உழைத்துள்ளேன், கட்சியை உருவாக்கி தலைமைத்துவத்தை உருவாக்கிய செயலாளர் நாயகம் YLS.ஹமீட் அவர்களை நன்றி மறந்து ஒதுக்கி வைத்திருப்பதைப்போல் என்னையும் மறந்து அறிக்கை விடுகின்றனர். மஹ்ரூஃப் எம்பி, ஊடகவியலாளர் சுகைப் அவர்கள் வெளியிட்ட செய்தியினை வன்மையாக கண்டிக்கின்றேன். என்னைப்பற்றி குறை கூறுவதற்கு அவர்களுக்கு தகுதியில்லை, உரிமையும் இல்லை.
நான் acmc கட்சியில் கல்முனை மாநகர சபையில் தேர்தல் கேட்டது உறுப்புரிமை பெற்றே. அப்போது இவர்கள் கட்சியில் இல்லை. இப்போதும் UNP கட்சியின் பிரதிநிதியாகவே மஹ்ரூப் எம்பி இருந்துகொண்டு acmc யின் அமைப்பார் எனக் கூறுவதானது வேடிக்கையாக உள்ளது. உறுப்புரிமை பெறாமலா நான் தேர்தல் கேட்டிருப்பேன் இதை சமுகம் நம்புமா ..? இது கூட தெரியாத அப்பாவி அரசியல்வாதியாக இருந்துகொண்டு இவைபோன்றோர்களால் சமுகத்துக்கு எதைப்பெற்றுக்கொடுக்க முடியும்.
இவர்களின் இந்த கருத்தானது அவர்களின் அரசியல் இயலாமையினையும் கால்புனர்ச்சியினையுமே எடுத்துக்காட்டுகிறது. acmc கட்சிக்காக 2010முதல் தீவிர அரசியல் செய்துள்ளேன் . சாய்ந்தமருது மத்திய குழுவின் செயலாளர் மற்றும் கொள்கைபரப்பு செயலாளர் பதவியினையும் வகித்துவந்த நிலையிலேயே ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டேன். எனது சேரவில் இவர்களுக்கு பயம் வந்துவிட்டது எங்கோ இருந்த என்னை இழுத்துவந்து மாலைபோட்டு முஸ்லிம் காங்கிரசில் சேர்க்கின்ற தேவை எமது தலைமைக்கு இல்லை. அப்படியான ஓர் நிலையிலும் முஸ்லிம் காங்கிரஸ் இல்லை. நான் இணைந்துகொண்டது எனது விருப்பத்திலும் எனது நண்பர்களின் ஆதரவுடனுமே தவிர சுகபோகத்துக்கு ஆசைப்பட்டோ வேறு ஏதும் தேவைக்காக்கவுமோ அல்ல.
சுய மரியாதையுடனே தலைமையை பாதுகாக்கவும் மரத்தை பாதுகாக்கவும் இணைந்துள்ளேன். இது எனதும் எம் முஸ்லிம் சமூகத்தினதும் தார்மிகப் பொறுப்பாகும். மயிலின் விழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது மக்கள் மரத்துடனே உள்ளனர் மரம் வெல்லும் மக்கள் வெல்வார்கள் மக்கள் தன்மானத்துடன் வாழ்வார்கள். உரிமை பாதுகாக்கப்படும். இறைவன் துணையுடன் எமது மண் மகத்துவம் பெரும். விரைவில் மயிலில் இருந்து பலர் மரத்துடன் இணையவுள்ளனர். வாய்மையே வெல்லும் எல்லாவற்றிற்கும் இறைவன் இருக்கின்றான்.
மக்கள் பணியில் மருதூர் அன்சார்.
இது தொடர்பில் முந்திய செய்தியினை பார்ப்பதற்கு இங்கே click செய்யவும்.
