தனது நான்கு பிள்ளைகளையும் பௌத்த துறவியாக்கிய தமிழ்த் தந்தை...!

பொல­ன­றுவை – திம்­பு­லா­க­லவை சேர்ந்த தமி­ழரான தந்­தை­யொ­ருவர் தனது நான்கு பிள்­ளை­க­ளையும் பிக்கு சாச­னத்தில் இணைத்­துள்ளார். இந்­நான்கு பிள்­ளை­களுள் ஆண் பிள்­ளைகள் மூவரும் திம்­பு­லா­கல துற­விகள் மடத்­திலும், பெண் பிள்ளை பொல­ன­று­வை அச­ரன சரண சுகத விகா­ரை­யிலும் துற­வறம் பூண்­டுள்­ளனர்.

ஆண்­பிள்­ளைகள் மூவரும் 9, 14, 16 ஆகிய வய­து­டை­ய­வர்கள் எனவும் பெண் பிள்ளை 11 வய­தா­னவர் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவர்கள் நால்­வரும் தற்­போது பிரி­வெனா கல்­வி­யினை கற்று வரு­கின்­றனர். சுமார் 2 வரு­டங்­க­ளுக்கு முன்­பாக பணிப்­பெண்­ணாக சவூதி சென்ற தனது மனைவி தொடர்பில் கடந்த ஆறு மாதங்­க­ளாக எந்­த­வித தக­வல்­களும் கிடைக்­க­வில்லை என்றும், பிள்­ளை­களை கவ­னித்துக் கொள்­வ­தற்கு யாரு­மில்­லாத கார­ணத்­தி­னாலும் அவர்­களை துற­வ­றத்தில் இணைத்­து­விட்­ட­தாக அவர்­களின் தந்­தை­யான சித்தி­ரவேல் சுந்­த­ர­லிங்கம் தெரி­வித்­துள்ளார்.

56 வய­தான சித்­தி­ரவேல் சுந்­த­ர­லிங்கம், வலது கை பூரண இய­லா­மை­யாலும், கண்­பார்வை குறை­பாட்­டி­னாலும் பாதிக்­கப்­பட்­டுள்­ளதால் தற்­போது துற­வறம் பூண்­டுள்ள தமது பிள்­ளை­க­ளுடன் திம்­பு­லா­கல மடா­ல­யத்தில் வசித்து வரு­கின்றார். இவர் வெலி­கந்த, செவ­ண­பி­டிய, கர­பொல கிரா­மத்தில் வசித்து வந்த வேளையில் குடும்ப பொரு­ளா­தார சிக்கல் கார­ண­மாக காணித் தரகர் ஒரு­வரின் வார்த்­தைக்கு அமைய தாம் வசித்து வந்த நிலத்­தினை 1 இலட்­சத்து 10 ஆயிரம் ரூபா­வுக்கு அடகு வைத்து விட்டு தனது மனை­வியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்­த­தாக தெரி­வித்­து­ள்ளார்.

கிழக்கு பல்­க­லைக்­க­ழகத்தில் விஞ்­ஞானம் தொடர்­பான ஒரு வருட கற்கை நெறியை பூர்த்தி செய்­துள்ள சுந்­த­ர­லிங்கம், 11 வரு­டங்­க­ளாக செங்­க­லடி மாவட்ட செய­ல­கத்தில் காரி­யா­லய உத­வி­யா­ள­ராக கட­மை­யாற்றி வந்­தி­ருந்த நிலையில் வரு­மானம் போதா­மை­யினால் பொல­ன­று­வை­யி­லுள்ள அரிசி ஆலை­யொன்றில் கட­மை­யாற்றி வந்தவர். தற்போது தனது இயலாமையின் காரணமாக மடத்தில் வசித்து வரும் இவரை தனது (ஆண்) பிள்ளைகள் மூவரும் துறவறம் பேணிவந்தாலும் சிறப்பாக கவனித்துக் கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -