இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களுக்கு தமக்கு வழங்கப்படுகின்ற வாகன தீர்வையை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் முன்வைக்கப்படுகின்றன.
இந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தமக்கு கிடைத்த தீர்வையற்ற வாகன அனுமதியை பயன்படுத்தி, 33,459,250 ரூபாவை தீர்வை செலுத்தாமல் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். இந்த டொயோட்டா லேன்ட் க்ரூசன் ஜீப் விமல் வீரவன்சவின் பெயரிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எனினும் தற்போது அதனை பயன்படுத்துபவருக்கு எவ்வித உரிய மாற்றல் பத்திர ஆவணங்களும் இல்லை என்று ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகின்றது. இது மோட்டார் திணைக்கள சட்டப்படி குற்றமான செயல் என்றும் குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.