புலமை பரிசில் பரீட்சை ஆரம்பம்..!

க.கிஷாந்தன்-
லங்கை பூராகவும் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையானது 21.08.2016 அன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. சுமார் 3 இலட்சம் 20 ஆயிரம் பேர் மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றவுள்ளனர்.

புலமை பரிசில் பரீட்சைக்கான முதலாவது வினாத்தாளுக்கான பரீட்சை காலை 9.30 இலிருந்து 10.15 வரைக்குமான 45 நிமிடங்களை கொண்டிருக்கும். இரண்டாம் வினாத்தாள் முற்பகல் 10.45 மணிமுதல் நண்பகல் 12 மணி வரைக்குமான 1 மணி நேரம் 15 நிமிடங்களை கொண்டிருக்கும்.

அந்தவகையில் மலையகத்திலும் 21.08.2016 அன்று மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது. அந்தவகையில் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மற்றும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம ஆகிய பாடசாலைக்கு அப்பகுதி மாணவா்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -