எப்.முபாரக்-
திருகோணமலை மூதூர் பகுதியில் ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான திருட்டு அலைபேசியொன்றினை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவரை அடுத்த செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று செவ்வாய்கிழமை(23) உத்தரவிட்டார். மூதூர், தக்வாநகர் பகுதியைச் சேர்ந்த 31வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான திருட்டு அலைபேசியொன்றினை தம் வசம் வைத்திருந்த நிலையிலேயே அலைபேசி உரிமையாளர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக அலைபேசியின் நபரை இரகசிய இலக்கங்களை வைத்து திங்காட்கிழமை(22) கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.