அம்பாறையில் அமைச்சர் ஹக்கீமின் அதிரடி நடவடிக்கை...!

ஷபீக் ஹுஸைன்-
பொது மக்களின் குடி நீர்ப் பிரச்சினைகளை தீர்க்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடமாடும் சேவையை அம்பாறை நகரில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (18) பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வு இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் அம்பாறை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் காரியாலயத்தில் நடைபெறும்.

அம்பாறை மாவட்ட குடியிருப்பாளர்கள் தாம் வாழும் பிரதேச வீதிகளில் பிரதான நீர்க் குழாய்கள் போடப்படாத நிலையில்இ இதுவரையில் தீர்த்து வைக்கப்படாதுள்ள குடி நீர்ப் பிரச்சினைகள், குடிநீரிணைப்புப் பெற கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் அவ்வீதிகள் சம்பந்தப்பட்ட தகவல்களை அல்லது உங்களின் பிரச்சினைகளை உள்ளடக்கிய முறைப்பாட்டினை எழுத்து மூலம் கொண்டு சென்று அம்பாறை நகரில் இடம்பெறும் இந்நடமாடும் சேவையில் துரிதகதியில் தீர்வினைக் காணலாம் அல்லது அதற்கான அனுமதியினை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்நிகழ்வில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், பிரதித் தலைவர் ஷபீக் ரஜாப்தீன், அமைச்சின் உயரதிகாரிகள், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர், யூ.எல்.எம்.முபீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பொது மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் இந்நடமாடும் சேவைக்குச் சென்று, இதுவரையில் உங்களுக்கு தீர்த்து வைக்கப்படாதுள்ள குடி நீர்ப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -