கூகுள் வெளியிட்டுள்ள அசத்தலான புதிய செயளி - வீடியோ இணைப்பு

கூகுள் நிறுவனம் எண்ட்ரோய்ட் மற்றும் ஐபோனில் பயன்படுத்தக் கூடிய டியோ (Duo) எனப்படும் புதிய வீடியோ உரையாடல் செயளி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது பயன்பாட்டிலுள்ள ஐபோன் பேஸ்டைம் (FaceTime), மைக்ரோசோப்டின்ஸ்கைப் (Skype), பேஸ்புக்கின் மெசஞ்சர் செயளி (Messenger) போன்றவை இது போன்று முகம் பார்த்து மற்றவர்களிடம் பேசிக் கொள்ளும் வசதியை அளிக்கிறது.

இந்நிலையில் இதே போன்ற வசதியை அளிக்க முடிவு செய்திருப்பதாக கடந்த மேமாதம் கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் படி டியோ (Duo) என்றசெயளியினை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இது மற்ற வீடியோ உரையாடல் செயளி போன்று இருந்தாலும் இதில் "Knock, knock"என்ற ஒரு புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.

மற்ற அப்பிளிகேஷனில் தகவல் அனுப்பும் நபர் மற்றும் தகவலை பெறும் நபர் எனஇருவரின் கையடக்கதொலைபேசி இலக்கத்தினை பதிவு செய்தால் மட்டுமேவீடியோ உரையாடல் செய்ய முடியும்.

ஆனால் டியோ (Duo) செயளியில் தகவல் அனுப்பும் நபர் மட்டும் கையடக்க தொலைபேசியினை பதிவு செய்து கொண்டால் போதும்.

தற்போது எண்ட்ரோய்ட் மற்றும் ஐபோனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடிய டியோ செயளியின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -