ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பதிதாக 40 அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மகிந்த ஆதரவு உறுப்பினர்கள் வகித்த பதவிகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளன. தொகுதி அமைப்பாளர்கள் 16 பேரும், மாவட்ட அமைப்பாளர்கள் 24 பேரும் ஜனாதிபதியினால் இன்று நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மகிந்த ஆதரவு உறுப்பினர்களான காமினி லொக்குகே, கோகிலா குணவர்தன, சஞ்சய சிரிவர்தனகே, சரத் குமார குணரத்ன, சந்தன ஜெயகொடி, பவித்ரா வன்னியாராச்சி, கெஹெலிய ரம்புக்வெல, மகிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, ஜகத் பாலசூரிய உள்ளிட்டவர்கள் வகித்த பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.