அபிவிருத்தி என்றும் உரிமை என்றும் கோஷமிடும் கிழக்கு முஸ்லீம் சமூகம் முதலில் தங்களது பொருளாதார வசதிகளை எவ்வாறு பெருக்கிக் கொள்வது என்று சிந்திக்கத் தவறி விட்டது பாரிய வேதனைக்குரிய விடயம் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் கூறினார்கள் .
பாதைகள் திருத்துவதோ அல்லது பிரதேச சபைகள் அமைப்பதோ ஒரு சமூகத்தை முன்னேற்றாது. பல பாரிய தொழில்சாலைகள் அமைக்கப் பட வேண்டும் அதன் மூலம் மக்கள் தொழில் வாய்ப்புகள் பெறவேண்டும் இதுதான் எமது கட்சியின் நோக்கம் என்றார்.அதட்குரிய நடவடிக்கைகளைத் தான் முன் எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.